Categories: சினிமா

நடிப்பில் புதிய அவதாரம் எடுக்கும் அருள்நிதி.. கபிலனை தோற்கடிப்பாரா ஸ்ரீனி..?..?

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அருள்நிதி. இவர் வம்சம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தனது பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு.க தமிழரசின் மகனும் ஆவார். இவர் வம்சம், மௌனகுரு, டிமான்டி காலனி, ஆறாவது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான டிமான்டி காலனி 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் முதல் பாகத்திலும் அருள்நிதி நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியான நிலையில் இதில் அருள்நிதி நடித்த ஸ்ரீனி கதாப்பாத்திரம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது அருள்நிதி பம்பர் படத்தின் இயக்குனர் எம்.செல்வக்குமார் இயக்கத்திலும், தேன் திரைப்படத்தின் இயக்குனர் கணேஷ் விநாயகன் இயக்கத்திலும் புதிய படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.

இப்படியான நிலையில் தற்போது அருள்நிதி மற்றொரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதாவது கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் அருள்நிதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களுடைய கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அருள்நிதி பாக்ஸராக நடிக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Nanthini

Recent Posts

ஐயோ… நிலத்தை மீட்க வந்தியா… வெட்டுடா அவனை… வனத்துறை அதிகாரிகள் மீது நடத்திய கொடூரத் தாக்குதல்… நெஞ்சை பதறவைக்கும் பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட 341 ஏக்கர் வனப் நிலத்தை மீட்க முயன்ற வனத்துறை அதிகாரிகள் இருவர் மீது…

4 minutes ago

திக் திக் திக்… பூட்டிய வீட்டில் 3 உடன்பிறப்புகள் சடலமாக மீட்பு… துர்நாற்றத்தால் வெளிவந்த கொடூரம்… பகீர் பின்னணி என்ன?… மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்…!

மகாராஷ்டிராவில் உள்ள விரார் பகுதியில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று…

28 minutes ago

அட கொடுமையே… போன் பார்த்துக்கொண்டிருந்த நபர் மீது… திடீரென இடிந்து விழுந்த கட்டடம்… ரிஷிகேஷில் நடுரோட்டில் நடந்த திகில் சம்பவம்…!

ரிஷிகேஷில் உள்ள சுதாமா மார்க்கில் அமைந்திருக்கும் GMOU வளாகத்தின் இரும்புச் சந்தையில், கட்டடத்தின் ஒரு பகுதியின் கைப்பிடிச் சுவர் திடீரென…

42 minutes ago

திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்…. “நான் இல்லாவிட்டாலும் கவலை இல்லை”…. தொண்டர்களுக்கு நேருவின் மாஸ் மெசேஜ்… திமுக போடும் மாஸ்டர் பிளான்….!

திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனை…

1 மணத்தியாலம் ago

BREAKING: இடைத்தேர்தலில் போட்டி…. சற்றுமுன் சீமான் அறிவித்தார்…!

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அப்போது, திமுக அல்லது அதிமுகவின் சார்பில்…

1 மணத்தியாலம் ago