பஞ்சாப் மாநிலத்தில் தனது மனைவியைக் கொலை செய்த வழக்கில், கடந்த நான்கு ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த முன்னாள் ராணுவ அதிகாரி சந்தீப் தோமர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு தனது மனைவியைக் கொலை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை போலச் சித்தரித்து நாடகமாடிய இவர், காவல்துறையின் தீவிர விசாரணையில் சிக்கினார். இவ்வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 2019-ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தவர், 2022-இல் நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு மீண்டும் சிறை செல்லாமல் தப்பியோடி தலைமறைவானார்.
பல ஆண்டுகளாகக் காவல்துறையினருக்குப் பிடிகொடுக்காமல் போக்கு காட்டி வந்த சந்தீப் தோமரை, ஒரு சிறிய தொழில்நுட்பத் தடயம் காட்டிக்கொடுத்துள்ளது. அவர் தனது இருப்பிடத்திலிருந்து LPG சிலிண்டர் முன்பதிவு செய்தபோது, அந்தத் தகவலைக் கொண்டு காவல்துறையினர் அவரது இருப்பிடத்தைக் கண்டறிந்தனர். இந்தத் தகவலின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட போலீசார், நீண்ட தேடுதலுக்குப் பிறகு அவரை மடக்கிப் பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர். ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி சிலிண்டர் புக் செய்ததன் மூலம் சிக்கிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…