#image_title
தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் மெரினா திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரையில் தனது பயணத்தை ஆரம்பித்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், மாவீரன், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். சிவகார்த்திகேயன் தயாரிக்கும் கொட்டுக்காளி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இவருக்கு நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் நான்தான் ரெடி செய்தேன் என கூற மாட்டேன் என பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இதனால் தனுஷ் ரசிகர்களும், சிவகார்த்திகேயன் ரசிகர்களும் சோசியல் மீடியாவில் சண்டை போட ஆரம்பித்தனர். இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகரான அந்தணன் கூறியதாவது, சிவகார்த்திகேயன் இப்போது முன்னாடி நடிகராக வலம் வருகிறார். ஆனால் தன்னை ஆரம்ப காலகட்டத்தில் உயர்த்தி விட்டவர்களை அவர் மறந்துவிட்டார். சிவகார்த்திகேயன் தனுஷை பற்றி தான் பேசினார் என கூற முடியாது. ஏனென்றால் எந்த பொது நிகழ்ச்சியிலும் தனுஷ் சிவகார்த்திகேயனை அவமதித்து பேசியதே கிடையாது. ஆனால் சினிமாவில் இருக்கும் வேறு சில நபர்களை குறிப்பிட்டு கூட சிவகார்த்திகேயன் பேசியிருக்கலாம்.
தமிழ் சினிமாவில் உயர்த்தி விட்டவர்களை சிவகார்த்திகேயன் மறந்துவிட்டார். முக்கியமாக ஆர்.டி ராஜன் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் முக்கியமானவர் என்று தான் சொல்ல வேண்டும். ஆர்யாவின் ஒரு படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த சிவகார்த்திகேயனை கேட்டபோது நீ ஹீரோ மெட்டீரியல் ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என ஆர்.டி ராஜா உறுதியாக இருந்துள்ளார். அவரை சிவகார்த்திகேயன் இப்போது கண்டு கொள்வதே இல்லை. ஒருமுறை நான் எஸ்.வி சேகரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் ஒரு அனுபவத்தை கூறினார். எஸ்.வி சேகரின் மகன் அஸ்வின் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
அந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் தொகுப்பாளராக வேலை பார்த்துள்ளார். எஸ்வி சேகர் சிவகார்த்திகேயனை சந்தித்து தனது மகன் நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நீங்கள் தான் தொகுப்பாளராக வரவேண்டும் என கேட்டுள்ளார். சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் வருவதாகவும் கூறியுள்ளார். அதனை கேட்ட சிவகார்த்திகேயன் கமல்ஹாசனுடன் ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்பது எனக்கு ஆசை. நீங்க சம்பளம் கூட தர வேண்டாம் எனக்கு எப்படியாவது கமல் சாரோட நின்னு ஒரு போட்டோ எடுத்தா போதும் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். அவர் கூறியபடியே நிகழ்ச்சிக்கு வந்த கமல்ஹாசனுடன் சிவகார்த்திகேயனை நிற்க வைத்து எஸ்.வி.சேகர் போட்டோ ரெடி பண்ணி கொடுத்துள்ளார்.
அப்படி கமல்ஹாசனுடன் ஒன்றாக நின்று ஒரு போட்டோ எடுப்பதற்காக ஆசைப்பட்ட சிவகார்த்திகேயன் இப்போது கமல் தயாரிக்கும் அமரன் திரைப்படத்தில் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் வைத்து நடைபெற்றது. அங்கு இருந்த வசதிகளுக்கு ஏற்றது போல சிவகார்த்திகேயனுக்கு தினமும் 1 லட்ச ரூபாய் கட்டணம் வரும் ரூமை புக் செய்து கொடுத்துள்ளனர். அந்த ரூம் தனக்கு செட் ஆகவில்லை வசதியாக இல்லை என சிவகார்த்திகேயன் கூறினாராம். அந்த காலகட்டத்தில் கமலுடன் இணைந்து ஒரு போட்டோ எடுத்தால் போதும் என ஆசைப்பட்ட சிவகார்த்திகேயன் இப்போது கமல் படத்தில் நடிக்கும் போது ரூம் செட் ஆகவில்லை, சரியாக இல்லை என கூறுவது நியாயமா என அந்தணன் சிவகார்த்திகேயனை பற்றி பேசியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…