ஐயோ பாவம்… மேலும் ஒரு கல்லூரி மாணவன் பலி… அடுத்தடுத்து நடக்கும் கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் பின்னணி…!

Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள வல்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவர் வரபிரசாத், தோப்பிற்கு விறகு வெட்டுவதற்காகச் சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள தோட்டத்தில் எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியை அவர் கவனிக்காமல் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து மாணவர் வரபிரசாத் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்ததும், மாணவனின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்தனர். மின்சார வாரியத்தின் அலட்சியப் போக்கே மாணவனின் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் எனக்கூறி, ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வாலாஜாபாத் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கவனக்குறைவாக இருந்த மின்வாரிய ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

4 minutes ago

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

24 minutes ago

ஐயோ கொடுமையே… GST பில் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்… பேக்கரி உரிமையாளரை அடித்து நொறுக்கி… JDS நிர்வாகிகள் வெறியாட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…

35 minutes ago

என்னது… இறந்தவர்கள் சாம்பலை சூப்பில் கலந்து குடிக்கிறார்களா?… அதிர்ச்சியூட்டும் பழங்குடியினர்களின் விசித்திர செயல்… இதன் பின்னணி என்ன?…

தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…

44 minutes ago

அடச்சீ… 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த… வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது… பள்ளியில் நேர்ந்த கொடூரம்…!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…

51 minutes ago