அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரான முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியில் இணையப் போவதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு இந்தச் சந்திப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதிமுகவினர் இந்தத் தகவலைத் தொடக்கத்திலிருந்தே வதந்தி என்று மறுத்து வந்த நிலையில், நேற்றிரவு மாஃபா பாண்டியராஜன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்துப் பூங்கொத்து கொடுத்துப் பேசினார்.
இந்தத் திடீர் சந்திப்பைத் தொடர்ந்து, மாஃபா பாண்டியராஜனுக்கு அதிமுகவில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்தச் சந்திப்பின் மூலம் அவர் அதிமுகவிலேயே நீடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கட்சிக்குள் நிலவிய சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…