ஒரே வாரத்தில் 18 லட்சம் பேரா?…. அண்ணாமலை காட்டிய மாஸ்… ஆடிப்போன தமிழக பாஜக தலைமை…. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் நடக்கும் பரபரப்பு….!

Spread the love

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அண்மையில் தொடங்கிய ‘வீ த லீடர்ஸ்’ (We the Leaders) இயக்கம் குறுகிய காலத்திலேயே அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயக்கம் தொடங்கப்பட்ட சில வாரங்களிலேயே சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் (துல்லியமாக 18,72,878 பேர்) இதில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோது அவரது அரசியல் பாணியால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்த இளைஞர்களும், புதிய தொண்டர்களும் தற்போது இந்த புதிய அமைப்பில் சேர ஆர்வம் காட்டி வருவது அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

இத்தகைய அசுர வேக உறுப்பினர் சேர்க்கையால் தமிழக பாஜக தலைமைக்குக் கூடுதல் கவலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிலர் அண்ணாமலையின் இயக்கத்திற்குச் சென்றுவிட்ட நிலையில், மேலும் இந்த இடப்பெயர்ச்சி தொடர்வதைத் தடுக்க தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக அவசர அவசரமாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரையில் நடைபெற்ற கூட்டங்களில் முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தி, மீனாதேவ் போன்ற மூத்த தலைவர்கள் பங்கேற்று, தொண்டர்களைத் தக்கவைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டங்களில், “யாரும் கட்சியை விட்டு வெளியேறக் கூடாது; தனிநபர்களை விட கட்சியின் கொள்கைகளே முக்கியம்” என்று மூத்த நிர்வாகிகள் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கு முன்பும் முக்கியத் தலைவர்கள் விலகியபோதும் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் நிர்வாகிகள், விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு தேர்தல் பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், கட்சியை விட்டு விலகியவர்களை மீண்டும் பாஜகவிற்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மறுபுறம், அண்ணாமலையின் இயக்கம் தொடங்கப்பட்டு 20 நாட்களாகியும் உறுப்பினர் எண்ணிக்கை இன்னும் 20 லட்சத்தை எட்டவில்லை என்பதால், பெரும்பாலான தொண்டர்கள் இன்னும் பாஜகவிலேயே நீடிக்கிறார்கள் என்று கட்சியின் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். எது எப்படியாயினும், ஒருபுறம் அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் தீவிர உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வர, மறுபுறம் தனது நிர்வாகிகளையும் தொண்டர்களையும் தக்கவைத்துக் கொள்ள பாஜக மாவட்டந்தோறும் சமாதானக் கூட்டங்களை நடத்தி வருவது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

என்னது… விஜய்யும் த்ரிஷாவும் ஒண்ணாவா?… ஜெகன் மோகன் ரெட்டி திருமணத்தில் நடந்த அதிரடி என்ட்ரி… உறைந்துபோன ரசிகர்கள்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ…!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…

15 minutes ago

“நவம்பர் 13-க்குப் பின் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் பூகம்பம்…. CM விஜய் ஆட்சிக்கே ஆபத்தா?”… திமுக-அதிமுக ரகசிய கூட்டணி?…. தலைமைச் செயலகத்தையே அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்….!

மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…

18 minutes ago

“கடவுள் இருக்கான் குமாரே”…. மரணம் தொட்டுச் சென்ற நொடி…. 8 அடி உயரத்திற்குப் பறந்த பைக் ஓட்டுநர்… அப்புறம் நடந்த அதிசயம்…. ஷாக்கிங் வீடியோ…!

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…

27 minutes ago

FLASH NEWS: சீமானுக்கு ஆதரவு கிடையாது…. கடைசி நேரத்தில் கைவிரித்த திமுக…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…

32 minutes ago

ஐயோ கொடுமையே… ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் இளைஞர்கள்… இந்தியாவை உலுக்கிய ஐ.எஸ்.ஐ-யின் அதிர்ச்சி வலைப்பின்னல்… இணையத்தில் வைரல்…!!

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…

36 minutes ago