இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான ‘ஒரே நாடு’ இரண்டாம் பதிப்பை சென்னை கமலாலயத்தில் வெளியிடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் விஜயைக் கடுமையாக விமர்சிக்கும் நோக்கில் அவரது குடும்பம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார். பொதுவெளியில் நாகரீக எல்லையைக் கடந்து பேசப்பட்ட இக்கருத்துகள், அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் உடனடியாகக் கடும் கண்டன அலைகளை உருவாக்கியுள்ளன.
நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், மேடையில் இருந்த பெண் தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் அமைதி காத்தாலும், பாஜக நிர்வாகி குஷ்பு இவரைக் கடுமையாகச் சாடினார். தரம் தாழ்ந்த கருத்துகளைப் பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இதனிடையே, தன் பேச்சில் எந்தத் தவறும் இல்லை என்றும், அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களே பேச்சைத் திரித்துக் கூறுகிறார்கள் என்றும் கூறிய நயினார் நாகேந்திரன், தாய் மற்றும் தாய்நாட்டின் மீது அக்கறை கொண்ட தான் யாரையும் உள்நோக்கத்தோடு குறிப்பிடவில்லை என விளக்கமளித்துள்ளார்.
முன்னாள் பாஜக தலைவரும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனருமான அண்ணாமலையும் நயினார் நாகேந்திரனின் பேச்சைக் கண்டித்துள்ளார். ஏற்கெனவே இருவருக்கும் இடையே நிலவிவந்த அரசியல் பனிப்போர், தலைவர் மாற்றத்திற்குப் பிறகு தீவிரமடைந்தது. அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கியபோது “அவர் விலகுவதால் கட்சிக்குப் பாதிப்பில்லை” என்று நயினார் நாகேந்திரன் கூறியிருந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் நயினார் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். தற்போதைய சர்ச்சையான பேச்சு, அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு அவருக்குச் சரியான பதிலடி கொடுக்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது
விஜய் குடும்பம் குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய சர்ச்சை, அரசியல் ரீதியாக அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சொந்தக் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ள எதிர்ப்பும், அண்ணாமலை ஆதரவாளர்களின் தொடர் தாக்குதல்களும் நயினாரை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளன. இந்த நிகழ்வின் மூலம் நயினாரின் சர்ச்சைப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்ததுடன், தங்களுக்கான அரசியல் கணக்கையும் தீர்த்துக் கொண்ட திருப்தியில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் களத்தில் செயல்பட்டு வருகின்றனர்.
திருப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் 'முதல் மரியாதை' படத்தின் "பூங்காற்று திரும்புமா..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது,…
வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சிவல்சருகு கிராமத்தைச் சேர்ந்த சங்கிலி முருகன் (38) கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி…
சிங்கப்பூரில் உள்ள பிரபல மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் (45), 2022 ஆம் ஆண்டு தனது 14 வயது…