தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் சமீபத்திய டெல்லி பயணமும், அங்குள்ள பாஜக மூத்த தலைவர்களுடனான சந்திப்புகளும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்த அண்ணாமலை, பாஜகவிலிருந்து விலகும் தனது முடிவை நேரடியாகவே தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது, தமிழக பாஜகவைச் சேர்ந்த இரு பெண் தலைவர்கள், ஒரு முன்னாள் தலைவர், ஒரு முன்னாள் எம்.எல்.ஏ உள்ளிட்ட ஐந்து பேர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜகவின் முக்கிய முடிவுகளை எடுக்கும் இந்த ஐந்து பேரும், திமுவினர் மற்றும் அதிமுகவினருடன் ரகசியக் கூட்டணி வைத்துக் கொண்டு தமிழகத்தில் பாஜகவை வளரவிடாமல் தடுப்பதாக அமித் ஷாவிடம் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சில வாரங்களாகவே அண்ணாமலை புதிய அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “இரண்டு நாட்கள் பொறுத்திருங்கள், விரிவாகப் பேசுகிறேன்” என அவர் பதிலளித்தது அரசியல் ஆர்வலர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் “தலைவா வா! தரணி ஆள வா!” என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். ஜூன் 4-ம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாமலை ஏதேனும் முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என்றும், ஆன்மிகம் மற்றும் தேசியத்தை மையமாகக் கொண்டு ஒரு புதிய அரசியல் இயக்கம் அல்லது கட்சியை அவர் தொடங்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறம், அண்ணாமலையை கட்சியில் தக்க வைத்துக் கொள்வதற்காக பாஜக மேலிடம் தொடர்ந்து தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவருக்குத் தேசிய அளவில் முக்கியப் பொறுப்பு வழங்குவது அல்லது மாநிலங்களவை (ராஜ்யசபா) எம்பி வாய்ப்பை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு விருப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. எனினும், அண்ணாமலை பாஜகவிலேயே தொடர்வாரா அல்லது தனிக்கட்சி அறிவிப்பாரா என்ற இறுதி முடிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாததால், தமிழக அரசியலில் அடுத்த பெரிய திருப்பம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…
மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள்…
ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…