சீமான் ரூட்டை கையில் எடுத்த அண்ணாமலை…. திருச்செந்தூரில் நடக்கப்போகும் அந்த ‘சம்பவம்’…. அலறப்போகும் தமிழக அரசியல் களம்….!

Spread the love

தமிழக பாஜக தலைவராகப் பொறுப்பேற்று, ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக என இருதரப்பையும் சமரசமின்றி விமர்சித்து, இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பெரும் செல்வாக்கை ஈர்த்தவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. இவரால் தமிழக அரசியலில் பாஜகவின் பெயர் தவிர்க்க முடியாத பேசுபொருளாக மாறியது. இருப்பினும், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விகள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பிய டெல்லி தலைமையின் முடிவுகளால், அண்ணாமலை தனது தலைவர் பதவியை இழக்க நேரிட்டது. அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிய அண்ணாமலை, இறுதியில் பாஜகவில் இருந்து விலகி தனது அரசியல் பயணத்தில் புதியதொரு பாதையைத் தேர்ந்தெடுத்தார்.

பாஜகவிலிருந்து விலகிய பின், ‘வீ தி லீடர்ஸ்’ (We The Leaders) என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ள அண்ணாமலை, 50 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்த பிறகு அதை அரசியல் கட்சியாக மாற்றும் இலக்குடன் செயல்பட்டு வருகிறார். தற்போதைய நிலையில் சுமார் 20 லட்சம் உறுப்பினர்கள் இதில் இணைந்துள்ள சூழலில், இந்த அமைப்பின் மூலம் மக்கள் நலன் சார்ந்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். சமீபத்தில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ‘மது ஒழிப்பு விழிப்புணர்வு மாநாடு’ என்ற பெயரில் இந்த அமைப்பின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் திரண்ட பெரும் கூட்டம் அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் குறித்த புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

பொள்ளாச்சி மாநாட்டைத் தொடர்ந்து, அண்ணாமலையின் அடுத்த இலக்காக திருச்செந்தூர் அமைந்துள்ளது. வரும் ஜூலை 26-ஆம் தேதி திருச்செந்தூரில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் இரண்டாவது மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாடு முற்றிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு, இயற்கை வளங்களை மீட்டெடுத்தல், மரம் வளர்ப்பு மற்றும் நீர்நிலை பாதுகாப்பு ஆகிய அம்சங்களை வலியுறுத்தி நடத்தப்பட உள்ளது. இதற்கான கால்கோல் விழா வரும் ஜூலை 17-ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெற உள்ள நிலையில், அண்ணாமலையின் ஆதரவாளர்களும் தன்னார்வலர்களும் இதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

தொடர்ச்சியாக மது ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரங்கள் வளர்ப்பு போன்ற முற்போக்கான முழக்கங்களை அண்ணாமலை முன்னெடுத்து வருவது, தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல ஆண்டுகளாகப் பேசி வரும் அதே சுற்றுச்சூழல் மற்றும் மது ஒழிப்பு அரசியல் பாதையைத் தான் தற்போது அண்ணாமலையும் கையில் எடுத்துள்ளார் என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. வலதுசாரி சித்தாந்தப் பின்னணியில் இருந்து வந்த அண்ணாமலை, தற்போது திராவிட மற்றும் தேசியக் கட்சிகளுக்கு மாற்றாக மண் சார்ந்த மாற்று அரசியலை நோக்கி நகர்கிறாரா என்பதை அவரது அடுத்தடுத்த மாநாடுகளின் வெற்றியே தீர்மானிக்கும்.

Nanthini

Recent Posts

“ஐயோ கடவுளே… சாவு இப்படியா வரணும்”…. லாரி சக்கரத்தில் சிக்கி துடித்த காவலர்…. அடுத்த நொடியே…. நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சி….!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…

15 minutes ago

முதலமைச்சர் இல்லம் அருகே அதிர்ச்சி…. தொப்புள் கொடியுடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை…. CCTVயில் சிக்கிய தாய்-மகள்…. அதிர்ச்சி சம்பவம்….!

சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…

23 minutes ago

அமெரிக்க தேர்தலுக்கு நடுவே வடகொரியா வீசிய குண்டு… அலறி அடிக்கும் உலக நாடுகள்…. கிம் ஜாங் உன் போட்ட மாஸ் பிளான்…!

வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…

29 minutes ago

வானில் பறந்த ராணுவ ஹெலிகாப்டர்… திடீரென அருகே வெடித்து சிதறிய பட்டாசுகள்… மிரண்டு போன ரசிகர்கள்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…

29 minutes ago

“8 மாத உழைப்பு வீண்… உடல் நலமும் போச்சு…” தூய்மை பணியில் இறங்கிய பிரபல ஆர்வலருக்குக் கை, கால்களில் தொற்று… வைரலாகும் வீடியோ…!!

மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…

37 minutes ago

திமுக மாஜி அமைச்சர்களுக்கு செக்…. வசமாக சிக்கும் பொன்முடி?…. அப்போ சைலண்ட் இதற்குத்தானா…. ஃபைல் ஓபன்…. காலையிலேயே பரபரப்பு….!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…

37 minutes ago