Categories: சினிமா

’10 வருடங்கள் கடந்துவிட்டது’… அம்மாவின் நினைவு நாளை முன்னிட்டு எமோஷனல் பதிவு வெளியிட்ட அனிதா விஜயகுமார்…

Spread the love

தமிழ் திரையுலகின் மூத்த நடிகராக இருப்பவர் விஜயகுமார். இவர் அதிக அளவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார். இவருக்கு முத்துகண்ணு மற்றும் மஞ்சுளா இன்று இரண்டு மனைவிகள் உள்ளனர். மூத்த மனைவி முத்து கண்னுக்கு அனிதா, கவிதா, அருண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி மூன்று மகள்கள் என விஜயகுமாருக்கு மொத்தம் ஐந்து மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். முதல் மனைவி முத்துக்கண்ணுவின் பிள்ளையான கவிதா விஜயகுமார் ‘கூலி’ என்ற படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார்.

அருண் விஜய் ஹீரோவாக நடித்து  சமீபத்தில் ‘யானை’ திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்த  வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று பேருமே ஹீரோயின்களாக நடித்தவர்கள். ஆனால் இவர்களில் வனிதா மட்டுமே தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கிறார்.

தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதா விஜயகுமார் குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார். இவரை தவிர மற்ற நான்கு சகோதரிகளும் அவர்களுக்கு ஒரே சகோதரனான அருண் விஜயையும் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை காட்டும் விதமாக அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இவர்கள் ஒருவருக்கொருவர் அன்பும் அரவணைப்புமாக இருப்பது பார்ப்போரை  பொறாமைப்பட வைக்கிறது. இவர்களில் விஜயகுமாரின் ஐந்து பிள்ளைகளில் நான்கு பேர் சினிமாவில் தங்களுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஆனால் இதுவரை சினிமாவில் நடிக்காத ஒருவர் என்றால் அது அனிதா விஜயகுமார் மட்டும் தான். எனவே அவரைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவர் கோகுல் கிருஷ்ணன் நின்ற மருத்துவரை 1997ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தற்போது இவர் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அனிதா எப்பொழுதும் இணையதளத்தில் ஆக்டிவாக இருப்பார். இவர் தற்பொழுது தனது அம்மாவின்  நினைவு தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

“இன்ஸ்டா ஸ்டிக்கரால் கிடைத்த லேப்டாப்…” நெட்டிசன்களின் இதயங்களை வென்ற ஆட்டோ ஓட்டுநரின் செயல்…! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்…!!

இரவு நேரத்தில் பெய்த கனமழைக்கு நடுவே, வாலிபர் ஒருவர் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பைக்கின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த…

56 seconds ago

அய்யய்யோ… டெரஸில் கிரில் வைக்கக் கூடாதுனு… இவ்வளவு பெரிய அக்கிரமமா?… பெண்ணை அடித்துத் துவைக்கும் பகீர் வீடியோ… நலசோபராவில் கொதித்தெழுந்த மக்கள்…!

நலசோபரா கிழக்கு பகுதியிலுள்ள ஒய்.பி. நகர் டெரஸில் கிரில் அமைப்பது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர்…

6 minutes ago

ஐயோ… நீதி கேட்கக் கூடாதா சார்?… முதல்வர் வருகையின்போது கதறி அழுத… கொல்லப்பட்ட சிறுவனின் பெற்றோர் மீது… பெண் காவலர் நடத்திய அதிர்ச்சித் தாக்குதல்… உ . பி – யில் பரபரப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதிநாத்தின் வருகையின்போது, 9 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட 10 வயது…

9 minutes ago

அடே… என் மச்சான் யாருன்னு உனக்குத் தெரியுமா?… சமூக வலைதள வீரரை அடித்து துவம்சம் செய்த அதிரடி மோதல்… இணையத்தில் வீடியோ வைரல்…!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…

20 minutes ago

அய்யய்யோ… நாய் குறுக்கே வருது… காப்பாற்ற முயன்ற அதிவேகக் கார் மின்கம்பத்தில்… மோதி பயங்கர விபத்து… 4 பேர் படுகாயம்… திக் திக் நிமிடங்கள்…!

உத்திரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷெர் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் நாயைக் காப்பாற்ற முயன்றபோது அதிவேகமாக வந்த கார் மின் கம்பத்தின் மீது…

26 minutes ago