#image_title
பிரபல இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்திரன் தமிழ் மற்றும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். ராக் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் அனிருத் இசையில் கடைசியாக ஜவான், லியோ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆனது.
இந்த படங்கள் மூலம் சினிமாவின் உச்சிக்கு சென்றார் அனிருத். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார். பல பெரிய நடிகர்களின் படத்திற்கு அனிருத் தான் இசை அமைக்கிறார். இந்நிலையில் அனிருத் முதலீட்டிலும் களமிறங்கி விட்டார். இந்நிலையில் அனிருத் வி.எஸ் மணி அண்ட் கோ என்ற தென்னிந்திய பில்டர் காபி ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராகவும், இணை நிறுவனராகவும் அனிருத் பதவி வகிக்கிறார். இந்த நிறுவனம் இசை நிகழ்ச்சிகள் மற்றும் சோசியல் மீடியா மூலம் தென்னிந்தியாவில் இருக்கும் இளைய தலைமுறையினரை கவரும் நோக்கத்தோடு களமிறங்கியுள்ளது. பாரம்பரிய பில்டர் காபி தயாரிக்க அதிக நேரம் தேவைப்படும்.
இதனால் இளம் தலைமுறைக்கு சுவையான காபியை ரெடிமேட் முறையில் இந்த நிறுவனம் வழங்குகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வி.எஸ் மணி அண்ட் கோ நிறுவனம் ஷார்க் டேங்க் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தியா முழுவதும் பிரபலமானது. தென்னிந்திய காபி மற்றும் ஸ்னாக்ஸ் வகைகளை இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்தில் அனிருத் ரவிச்சந்திரன் மட்டுமில்லாமல் ராணா டகுபதி, ரன்பீர் கபூர், ஹுமா குரேஷி உள்ளிட்ட பிரபலங்களும் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…