#image_title
சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பானியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. DDக்கு என ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று காபி வித் டிடி இந்த நிகழ்ச்சியை ஏராளமானார் விரும்பி பார்த்தனர்.
பிற நிகழ்ச்சிகளையும் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கினார். விஜய் டிவியின் அடையாளமாகவே ஒரு கட்டத்தில் திவ்யதர்ஷினி மாறினார். ஆனால் ஒரு சில காரணங்களால் திவ்யதர்ஷினி விஜய் டிவியில் இருந்து விலகி விட்டார். இப்போது திரைப்பட விழாக்களை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்குகிறார். சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் தோன்றியுள்ளார். கமல் தயாரிப்பில் மாதவன் நடித்த நளதமயந்தி படத்தில் திவ்யதர்ஷினி நடித்துள்ளார்.
ஒரு சில படங்களிலும் சிறு வயதில் நடித்துள்ளார். கடைசியாக சுந்தர்.சி இயக்கிய காபி வித் காதல் திரைப்படத்திலும் கௌதம் இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் திவ்யதர்ஷினி நடித்துள்ளார். இதில் துருவ நட்சத்திரம் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திவ்யதர்ஷினி ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக திவ்யதர்ஷினி தனது கணவரை விட்டு பிரிந்து விட்டார்.
அதன் பிறகு இப்போது வரை சிங்கிளாகவே வலம் வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் திவ்யதர்ஷினி அவ்வபோது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது கருப்பு நிற உடையில் நடிகைகளையே மிஞ்சும் அளவுக்கு போட்டோ சூட் நடத்தி அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.
#image_title
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…