#image_title
கமல்ஹாசனின் திரைவாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்த படம் என்று நாயகன் திரைப்படத்தைச் சொல்லலாம். அந்த படம் அவருக்கு இரண்டாவது தேசிய விருதைப் பெற்றுத்தந்தது. அதுமட்டுமில்லாமல் அந்த படம்தான் மணிரத்னம் சகாப்தத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியது என சொல்லலாம்.
அப்படி மணிரத்னம்- இளையராஜா- கமல்ஹாசன் கூட்டணியில் 1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம் தமிழ் சினிமாவில் இன்றளவும் ஒரு மைல்கல் திரைப்படமாக பேசப்பட்டு வருகிறது. கமல்ஹாசனுக்கு மூன்றாம் பிறைக்கு பிறகு இரண்டாவது தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
இந்த படத்தின் உருவாக்கத்தின் போது பல பிரச்சனைகளை படக்குழுவினர் சந்தித்துள்ளனர். படத்தின் கதை மும்பையைச் சேர்ந்த வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை ஒட்டி உருவாக்கப்பட்டதாக தகவல்கள் பரவ, அவரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி, அவரை தேடி சென்றுள்ளனர். ஒருவழியாக அந்த பிரச்சனையை முடித்தால் படம் சென்சாரில் குற்றச் செயல்களை ஆதரிப்பதாக பிரச்சனை கிளம்பியுள்ளது.
இதே போல பட உருவாக்கத்தின் போதே இயக்குனர் மணிரத்னத்துக்கும் தயாரிப்பாளர் முக்தா சீனிவாசனுக்கும் இடையே பில்ம் ரோல் சம்மந்தமாக பிரச்சனைகள் எழுந்துள்ளன. இந்த படத்துக்காக மணிரத்னம் எடுத்த காட்சிகளை எடிட் செய்து பார்த்த போது 6 மணிநேரம் ஓடும் அளவுக்கு படம் வந்துள்ளது. அதன் பிறகு எடிட் செய்து தற்போது இருக்கும் வடிவம் கிடைத்துள்ளது.
அந்த படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டாகி, இன்று தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக் திரைப்படமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த படம் ரிலீஸான போது அனைத்து முன்னணிப் பத்திரிக்கைகளும் பாராட்டி விமர்சனம் எழுதினார்கள். முன்னணி பத்திரிக்கையான விகடன் 60 மார்க் கொடுத்தது.
ஆனால் படத்தின் விமர்சனத்தின் இறுதியில் “இது இளையராஜாவுக்கு 400 ஆவது படமாம். படத்தின் செட், டேக்கிங், கலர் ஆகிய பிரம்மாண்டங்களுக்கு நடுவே இளையராஜா இருக்குமிடம் தெரியாமல் அமுங்கி போய்விடுகிறார்… பாவம்” என சொல்லியுள்ளனர். ஆனால் இன்றளவும் நாயகன் படத்தை நினைத்தாலே கமல்ஹாசனின் நடிப்புக்கு இணையாக நினைவுக்கு வருவது இளையராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும். ஆனால் அதை புரிந்துகொள்ளாமல் அப்போது அப்படி ஒரு விமர்சனம் வந்திருப்பது வியப்பாகதான் உள்ளது.
#image_title
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…