கரூரில் சமீபத்தில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே முதல் கட்டமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான கட்சியின் பொதுச் செயலாளர் N. ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ள காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் தேர்தல் பிரச்சார பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா தன்னுடைய X தள பக்கத்தில், வன்முறையை தூண்டும் வகையில் ஒரு பதிவை பதிவிட்டு பிறகு அதனை நீக்கினார். இது தொடர்பாகவும் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கரூர் துயர சம்பவ வழக்கில் தமிழக வெற்றிக்கலகம் பொதுச்செயலாளர் ஆனந்த், மாநில இணைச்செயலாளர் நிர்மல் குமார் தலைமறைவாகி உள்ள நிலையில் அவர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இருவரை கைது செய்ய முடியவில்லை. நிர்மல் குமார் உதவியாளரிடம் போலீஸ் துருவி துருவி விசாரணை நடத்தியது. இருவரின் ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இன்றுக்குள் இருவரையும் கைது செய்ய போலீஸ் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் இந்த உற்சாகமான கருத்து தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பமாக, சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சித்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் உருவான பெரும் அலையில் நாம்…
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…