Categories: சினிமா

அன்றே கணித்தார் ஆண்டவர்.. ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியின் அசைக்க முடியாத சாதனை..!!

Spread the love

ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி அஞ்சலி, தளபதி, சசி லீலாவதி, உன்னைப்போல் ஒருவன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். முதன்முதலாக ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி கமல்ஹாசனின் உன்னை போல் ஒருவன் திரைப்படத்தில் சவுண்ட் டிசைனராக தனது வேலையை ஆரம்பித்தார்.

அதன் பிறகு விஸ்வரூபம், மன்மதன் அம்பு, ஓ காதல் கண்மணி, குற்றமே தண்டனை, ஸ்பைடர், காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், பொன்னியின் செல்வன், ரகு தாத்தா உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி வேலை பார்த்துள்ளார். தற்போது தக் லைஃப் படத்திலும் இவர் தான் சவுண்ட் டிசைனராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்திற்காக சிறந்த தமிழ் திரைப்படம் உள்ளிட்ட நான்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், சவுண்டு டிசைனர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சசி லீலாவதி படத்தில் கமல்ஹாசனின் மகனாக ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி நடித்தார். அவர் கமல்ஹாசனிடம் அப்பா ஸ்பேனர் கொடுங்க ஸ்க்ரூ டிரைவர் கொடுங்க என வந்து கேட்பார்.

உடனே கமல்ஹாசன் அவரை பார்த்து பெரிய இன்ஜினியராக வருவானாக்கும் என ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியை பார்த்து சொல்லும் படியான வசனம் அமைந்திருக்கும். தற்போது ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி சவுண்ட் இன்ஜினியராகவே மாறி தேசிய விருதையும் வென்றுள்ளார். இந்த நிலையில் அன்றே கணித்தார் ஆண்டவர் என கமல்ஹாசன் ரசிகர்கள் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியையும் கமலையும் கொண்டாடி வருகின்றனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

டெல்லி ஹோட்டலில் நள்ளிரவில் பயங்கரம்… இரு பெண்களை பளார் என அறைந்த சப்-இன்ஸ்பெக்டர்… சிசிடிவி-யில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!

தேசிய தலைநகர் டெல்லியின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஆதர்ஷ் நகர் பகுதியில், நள்ளிரவில் நடந்த ஒரு காவல்துறை நடவடிக்கையின் போது இரண்டு…

2 minutes ago

பரபரப்பு..! விவசாயியிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட த.வெ.க நிர்வாகி.. அடுத்த நொடியே பதவியை பறித்த கட்சி தலைமை…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தமிழக வெற்றிக்…

7 minutes ago

அடக்கடவுளே பயங்கரம்..! காரில் பெண்ணை குத்திவிட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்த வாலிபர்… உடல் கருகி சாம்பலான கொடூரம்..!!

பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து…

17 minutes ago

“அவருக்கு பதவி கொடுத்தது ஏன்…?” எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்த அமைச்சர் நிர்மல் குமாரின் அதிரடி பதில்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஆட்சி…

24 minutes ago

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது… அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அடையாள அட்டைகளில் இனிமேல் சாதிப் பெயர் இடம் பெறாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக…

38 minutes ago

“சினிமாவே வேண்டாம்…!” மக்கள் என்னை நிராகரிச்சிட்டாங்க…கண்ணீருடன் முடிவெடுத்த சமந்தா… தடுத்து நிறுத்திய அந்த ஒரு நபர்…!

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, திரையரங்குகளில் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் 'மா இன்டி பங்காரம்'. சமந்தாவின்…

40 minutes ago