“6 சீட் + 1 ராஜ்யசபா” அதிமுகவுக்கு ‘டாட்டா’, திமுகவுக்கு ‘ரூட்… ? சத்தமில்லாமல் முடிந்த தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை…!!

Spread the love

தேமுதிகவின் கூட்டணி குறித்த தகவல்கள் தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.  கடந்த 2024 மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காகப் பலமான கூட்டணியை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது. அதிமுகவிடம் தேமுதிக கேட்ட 17 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் கோரிக்கைக்கு உடன்பாடு எட்டப்படாததால், தற்போது அக்கட்சி திமுக பக்கம் நகரத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக தரப்பில் தேமுதிகவிற்கு 6 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் வழங்க ரகசியமாக இணக்கம் தெரிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. திமுக ஏற்கனவே மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கியுள்ள நிலையில், தேமுதிகவையும் இதே போன்றதொரு பார்முலாவில் இணைக்கத் திட்டமிட்டுள்ளது.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தற்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் சென்னை திரும்பியதும், பிப்ரவரி முதல் வாரத்தில் கூட்டணி குறித்த இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

Soundarya

Recent Posts

2 அமைச்சருக்காக தவெக காலில் விழுவதா..? பதவிக்காக நட்பை அடகு வச்சிடீங்களே…. காங்கிரஸை கிழித்தெடுத்த திமுக சரவணன்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதை திமுக கடுமையாகச்…

30 seconds ago

BREAKING: விஜய்யின் தவெக அரசு… காலையிலேயே ஸ்டாலின் பரபரப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், தவெக ஆட்சியமைக்க திமுக எந்தவித இடையூறும் செய்யாது என முதலமைச்சர்…

5 minutes ago

ஒரு எம்.எல்.ஏ-வுக்கு 50 கோடி பேரம்..? வலை விரித்த தவெக… மொத்தமாக தூக்கிய எடப்பாடி… தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!

தமிழக சட்டசபை தேர்தலில் முதல் முறையாகக் களம் கண்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில்…

5 minutes ago

30 அதிமுக MLA-க்கள் விஜய்க்கு ஆதரவு?…. இபிஎஸ் கையில் எடுத்த ‘கூவத்தூர்’ பார்முலா… இனிதான் ஆட்டமே ஆரம்பம்..!

தமிழக அரசியலில் தவெக ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இழுபறி நீடிக்கும் சூழலில், அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

7 minutes ago

தமிழக அரசியலில் மிகப்பெரிய ட்விஸ்ட்…. விஜய்யை வீழ்த்தத் துடிக்கும் பழைய எதிரிகள்… திமுக – அதிமுக மெகா கூட்டணி?… அதிர்ச்சி தகவல்…!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழலில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும்…

12 minutes ago

121 இடங்கள்…! “ஒரு முதல்வர் நாற்காலி” அந்த இடம் யாருக்கு.? தவெக-வை வீழ்த்த திமுக – அதிமுக போடும் மாஸ்டர் பிளான்…!!

தமிழக அரசியலில் பரம எதிரிகளாகக் கருதப்படும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை…

13 minutes ago