Categories: சினிமா

‘அலைபாயுதே’ படத்தில் வந்த மிஸ்டேக்.. புட்டு புட்டு வைத்த சிம்பு.. இணையத்தில் வைரலாகும் ஓல்டு வீடியோ..!

Spread the love

நடிகர் சிம்பு அலைபாயுதே படத்தில் வந்த சிறிய மிஸ்டேக் ஒன்றை பற்றி பேசிய பழைய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், பாடல் ஆசிரியர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்ட இவர் கடைசியாக பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து சினிமாவில் தோல்விகளை சந்தித்து வந்த சிம்பு மாநாடு என்ற திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியிருந்தார். அடுத்தடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருந்தார்.

அதை தொடர்ந்து இப்படத்தின் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. தற்போது கமல் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உருவாகும் திரைப்படம் தக் லைஃப்.  இந்த திரைப்படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார். இது தொடர்பான என்ட்ரி டீசர் கூட சமீபத்தில் வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வந்தது.

இந்நிலையில் நடிகர் சிம்பு சூட்டிங் ஸ்பாட்டில் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. 2007 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான காளை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ தான் அது. தருண் கோபி இயக்கிய இப்படத்தில் வேதிகா, சங்கீதா, சந்தானம் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்தை இயக்கியிருந்த இப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.

அந்த வீடியோவில் சிம்பு பேசியிருந்ததாவது “சினிமாவில் ஏகப்பட்ட வேலை இருக்கு, படத்தில் நாங்கள் வசனம் பேசும்போது நேரடியாக அந்த குரல் வந்து விடாது. நாகரா என்ற கருவி உள்ளது அதில் இருக்கும் மைக் மூலம் நாங்கள் பேசும் வசனம் ரெக்கார்ட் பண்ணி எடிட்டிங் ரூமுக்கு வந்துவிடும், இந்த குரலையும் அந்த காட்சியையும் ஒன்றிணைத்து எடிட் பண்ணி அதன் பிறகு டப்பிங் செல்லும்.

 

படத்துல ஷூட்டிங் எடுக்கும் போது சம்பந்தப்பட்ட நபருக்கு அருகே இந்த மைக் பொருத்தப்பட்டிருக்கும். அலைபாயுதே படத்தில் ஷாலினியும் ஸ்வர்ணமால்யாவும் வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்ய செல்வார்கள். அப்போது அவரது அப்பா கிரவுண்டில் வந்து எங்கம்மா போறீங்க என்று கேட்பார். அப்போது அந்த மைக் உள்ளே வரும்” என்று அந்த படத்தில் நடந்த மிஸ்டேக் குறித்து பேசி இருப்பார் சிம்பு. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

புதிய வியூகம்..! இது தான் சரியா இருக்கும்… அதிமுக வேட்பாளர் தேர்வில் EPS போடும் பக்கா பிளான்..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS), 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் நேர்காணலை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி…

1 minute ago

“பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு” முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் வாழ்த்து மடல்..!!

"சூரியனைப் போற்றும் பொங்கல் நன்னாள், திமுகவுக்கு வெற்றிப் பொங்கலாக அமையட்டும்" என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பொங்கல்…

10 minutes ago

சிங்கத்தின் வாயில் சிக்கிய விஜய்..? பாஜக போடும் பிளான்… ஒரே போடாக போட்ட செல்வப்பெருந்தகை…!!

விஜய்யின் சிபிஐ விசாரணை குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பது…

15 minutes ago

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. தடையை மீறினால்.. தமிழகம் முழுவதும் பறந்த எச்சரிக்கை…!!

தமிழகத்தில் ஜனவரி 16-ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு, டாஸ்மாக் உள்ளிட்ட…

21 minutes ago

பயணிகளே உஷார்…! கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை…. உடனே இந்த நம்பருக்கு கூப்பிடுங்க…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார்கள் குவிந்து வருகின்றன.…

43 minutes ago

நள்ளிரவில் கொழுந்துவிட்டு எரிந்த ஆம்னி பேருந்து… தூக்கத்தில் அலறிய பயணிகள்… அடுத்து நடந்த பதற வைக்கும் சம்பவம்…!

புதுச்சேரியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி 13 பயணிகளுடன் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, நூறு அடி சாலை மேம்பாலத்தில் சென்று…

49 minutes ago