சேலம் அல்லிகுட்டை பிரதான சாலையில் திடீரென குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருக்க முயன்றபோது ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், ஓட்டுநர் மற்றும் இரண்டு பெண்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இப்பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விபத்து நடந்தவுடன் பொதுமக்களின் துரித நடவடிக்கையால் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களை விரட்டும் நாய்களால் விபத்துகள் அடிக்கடி நிகழ்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
https://twitter.com/HateDetectors/status/2113559574385234198/video/1
தொடரும் இது போன்ற விபத்துகளைத் தவிர்க்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தெரு நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீரட் நீல டிரம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முஸ்கான் மற்றும் அவரது காதலன் சஹில், அந்தத் தீர்ப்பை…
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…