இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும் பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு என்பது மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது. தற்போது ஒரு வீடியோ வெளியாகி ரயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்னாவை சேர்ந்த ரவி திவேதி என்ற பயணி ரயிலில் பயணித்த போது Amrit Bharat express ரயிலில் ஒருமுறை பயன்படுத்தும் உணவு பாத்திரங்கள் கழுவி மீண்டும் பயன்படுத்தப்படுவது குறித்து அதிர்ச்சி தரும் வீடியோவை பகிர்ந்துள்ளார். பேன்ட்ரி காரின் அருகில் நின்ற போது பயன்படுத்தப்பட்ட தட்டுகள் குப்பை தொட்டியில் இருந்து எடுத்து வாஷ்பேஷனில் கழுவப்படுவதை நேரில் கண்டு அந்த பயணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கேள்வி கேட்டபோது, அந்த ஊழியர், இந்த பொருட்கள் பாதி விலைக்கு திருப்பி தரப்படுகின்றன, அதனால் அவைகளை கழுவி மீண்டும் பயன்படுத்துகிறோம் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். பிறகு வீடியோ பதிவு செய்யப்படுவதை உணர்ந்த அந்த ஊழியர் ரவியை மிரட்டி வீடியோ பதிவை நிறுத்துமாறு எச்சரித்துள்ளார். பிறகு அந்த வீடியோவை அவர் இணையத்தில் பகிர்ந்த நிலையில் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்திய ரயில்வே கேட்டரிங் சேவைகளின் சுகாதார தரநிலைகள் தொடர்பாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயணிகளின் ஆரோக்கியம் முன்னுரிமை பெறவேண்டிய சூழலில் இவ்வாறான செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
தமிழகத்தின் 2026 சட்டசபை தேர்தல் முடிந்து, தமிழக வெற்றிக் கழக அரசு நேற்று பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், இன்று புதிய எம்.எல்.ஏ-க்களின்…
நெதர்லாந்து நாட்டின் 'எம்பி ஹோண்டியஸ்' (MB Hondius) என்ற சொகுசு கப்பலில் பயணித்த இரண்டு இந்தியர்களுக்கு ஹன்டா வைரஸ் (Hantavirus)…
தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் இன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த…
இந்தியப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை அன்று ரத்தச் சிவப்பில் வர்த்தகமாகி முதலீட்டாளர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சர்வதேச…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான புதிய அரசு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் “சிங்கப்பெண்” என்ற பெயரில் புதிய…
தமிழக சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தமிழகத்தின் புதிய முதல்வராகப்…