“ஜெயலலிதா காலத்து கெத்து எங்கே?” – அமித்ஷா அழைத்தவுடன் டெல்லி பறந்த எடப்பாடி… அதிர்ச்சியில் ரத்தத்தின் ரத்தங்கள்….!

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக கூட்டணியைப் பொறுத்தவரை, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் அண்ணா அறிவாலயத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பத்தாண்டுகளாக நீடிக்கும் இந்த வலுவான கூட்டணியில், சிறிய அளவிலான முரண்பாடுகள் எழுந்தாலும், அவற்றை பேச்சுவார்த்தை மூலம் கலைத்து தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கூடுதல் கட்சிகளுடன் திமுக வெற்றிகரமாகத் தேர்தலை நோக்கி நகர்கிறது. தங்கள் கூட்டணிக்குத் தங்களே தலைமை என்பதைச் செயலில் காட்டும் வகையில், கூட்டணிக் கட்சிகளைத் தேடி வரவழைத்து திமுக காய்களை நகர்த்தி வருகிறது.

அதே நேரத்தில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் நிலைப்பாடு அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் விவாதத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. “நாங்கள் தான் கூட்டணிக்குத் தலைமை” என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு மேடைகளில் முழங்கினாலும், நிதர்சனத்தில் பாஜகவின் பிடிக்குள் அதிமுக சிக்கியுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வருவதாக இருந்த திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்ட நிலையில், அமித் ஷாவின் அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிசாமி தொகுதிப் பங்கீடு பட்டியலுடன் டெல்லிக்குப் பயணித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த டெல்லி பயணம் அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களை மிகுந்த மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, தேசிய அளவில் எவ்வளவு பெரிய தலைவர்களாக இருந்தாலும், பிரதமர் மோடியே ஆனாலும் போயஸ் கார்டன் இல்லத்திற்கு நேரில் வந்துதான் பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கமாக இருந்தது. 1996 முதல் 2016 வரையிலான தேர்தல்களில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஜெயலலிதாவின் சந்திப்பிற்காக நள்ளிரவு வரை காத்திருந்து தொகுதிப் பங்கீட்டை முடித்த வரலாற்றை ஒப்பிட்டு, தற்போது அதிமுக தலைமை டெல்லிக்கு அழைக்கப்படுவது கட்சியின் கௌரவத்தைச் சிதைப்பதாகத் தொண்டர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

சமூக வலைதளங்களில் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி வரும் அதிமுகவினர், “விசாரணைக்குச் சம்மன் அனுப்புவது போல” அமித் ஷா அழைத்தவுடன் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது திராவிட இயக்கத்தின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால் எனக் கருதுகின்றனர். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை இழுக்க பாஜக முயற்சித்த தோல்விக்குப் பிறகு, அதிமுகவை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர பாஜக துடிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த நெருக்கடியான சூழலில், டெல்லி பயணத்தின் விளைவாக எட்டப்படும் தொகுதிப் பங்கீடு, அதிமுகவின் தேர்தல் வெற்றியை பாதிக்குமா அல்லது கூட்டணியைப் பலப்படுத்துமா என்பது வரும் வாரங்களில் தெரிந்துவிடும்.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

6 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

7 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

8 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

8 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

8 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

8 மணத்தியாலங்கள் ago