நேற்று கேரள மாநிலம் குன்னம் குளம் அருகே உள்ள பகுதியில் ஒரு காரும் ஆம்புலன்ஸ் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வண்டி கண்ணூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆம்புலன்ஸில் இருந்த நோயாளியை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு கண்ணூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பாக வெளியாகி உள்ள சிசிடிவி காட்சிகளில் கார் ஒன்று ஆட்டோ ரிக்ஷாவை முந்திக்கொண்டு ஆம்புலன்ஸ் மீது மோதியது தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்த நிலையில் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி உட்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்கள் குன்னம் குளத்தை சேர்ந்த புஷ்பா மற்றும் கண்ணுரை சேர்ந்த குஞ்சிராமன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். புஷ்பாவின் கணவர் ஆண்டோ வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பலரையும் பதற வைத்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…