ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசிஎஸ், மைக்ரோசாப்ட், மெட்டா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவை தலைமை இடமாக கொண்ட அமேசான் நிறுவனம் ஆன்லைன் வர்த்தகம், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்விம்மிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இன்று முதல் அமேசான் நிறுவனம் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் அமேசானில் வேலை பார்த்து வருகின்றனர். அதில் 30 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 27 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மறு கட்டமைப்பு செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பணி நீக்க நடவடிக்கை ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
