அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சுகுமாரின் இயக்கத்தில் உருவான புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் வெளியானதற்கு முதல் நாள் ஹைதராபாத்தில் சந்தியா திரையரங்கில் முதல் காட்சியை காண அல்லு அர்ஜுன் வந்தபோது ஏற்பட்ட ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி 39 வயது ரேவதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரத்திற்கு வருத்தம் தெரிவித்திருந்த அல்லு அர்ஜுன் அந்த குடும்பத்திற்கு 25 லட்சம் நிதி உதவியும் அறிவித்திருந்தார். இந்த சம்பவத்தால் தெலுங்கானா போலீசார் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் நேற்று காலை அல்லு அர்ஜுனை கைது செய்தனர்.
காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்ற அவர்கள் பிறகு அல்லு அர்ஜுன் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும் ஆவணங்கள் கிடைப்பது தாமதமானதால் அல்லு அர்ஜுன் நேற்று இரவு சிறையில் இருந்தார். இதழையில் இன்று காலை 7 மணிக்கு மத்திய சிறையில் இருந்து அல்லு அர்ஜுன் வெளியே வந்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தான் நலமுடன் பாதுகாப்பாக இருக்கிறேன். ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி. நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நடந்து கொள்வேன். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 20 வருட காலங்களாக பட ரிலீஸ் இன் போது திரையரங்குக்கு சென்று வருகிறேன். 30 படங்களுக்கு இவ்வாறு சென்று உள்ளேன். இத்தனை வருடங்களில் இது போன்ற ஒரு நிகழ்வு கூட நடந்ததே இல்லை. ஒருவரின் உயிரிழப்பை என்ன செய்தாலும் ஈடு செய்ய முடியாது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தான் செய்ய தயாராக உள்ளேன் என்று அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில், சாலையில் விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய நபர் ஒருவரைப் பெண்மணி…
பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…