“தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அடித்தது பம்பர் லாட்டரி”… முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…. தமிழக அரசின் அந்த ‘ரூ.12.67 கோடி’ ரகசியம்…!

Spread the love

தமிழகத்தில் உள்ள விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அவர்களுக்கான தினசரி உணவுப்படி, சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களுக்கான நிதியை உயர்த்தி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முதல்வர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தச் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதிகள், சிறப்பு விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று வரும் சுமார் 2,600 மாணவ, மாணவியர்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என்று பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

விளையாட்டு வீரர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்குவதற்காக தினசரி உணவுப்படி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை நாளொன்றுக்கு ஒரு மாணவருக்கு வழங்கப்பட்டு வந்த ரூ. 350 உணவுப்படியானது, இனி ரூ. 450 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் விஜய் ஆணையிட்டுள்ளார். இந்த அதிரடி மாற்றத்தால், இதற்கான மொத்த செலவினத் தொகை ரூ. 29.12 கோடியிலிருந்து ரூ. 37.44 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மாணவர்களின் உணவுக்காக மட்டும் கூடுதலாக ரூ. 8.32 கோடி நிதியைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

உணவுப்படியைத் தொடர்ந்து மாணவர்களின் தூய்மை மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் சீருடைகளுக்கான தொகையும் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான சீருடைத் தொகை ரூ. 6,000-த்திலிருந்து ரூ. 15,000 ஆகவும், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான தொகை ரூ. 10,000-த்திலிருந்து ரூ. 25,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்னதாக ஒதுக்கப்பட்ட ரூ. 1.70 கோடி நிதியானது, தற்போது ரூ. 4.25 கோடியாக உயர்த்தப்பட்டு, கூடுதலாக ரூ. 2.55 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது விளையாட்டு வீரர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவற்றுடன் விளையாட்டு வீரர்களின் தனிநபர் திறனை சர்வதேச அளவுக்கு மேம்படுத்த ஏதுவாக, பிரத்யேக விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான நிதியும் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்க வழங்கப்பட்ட ரூ. 2,000 இனி ரூ. 10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக ரூ. 1.80 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, மொத்த செலவினம் ரூ. 80 லட்சத்திலிருந்து ரூ. 2.60 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த மூன்று பிரிவுகளின் கீழ் ரூ. 12.67 கோடி கூடுதல் நிதியை வழங்கி, தமிழக விளையாட்டுத் துறையில் புதியதொரு உத்வேகத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க…!” – முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு தந்தை S.A.C கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…

5 minutes ago

“6 மணிக்கு மேல நோ பாலிடிக்ஸ்… முதலமைச்சர் விஜய்யின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்… பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்…!!”

திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…

22 minutes ago

பிரியாணி பிரியர்களுக்கு வந்த செம நியூஸ்… மளமளவென குறையும்.. பாஸ்மதி அரிசி விலை… பின்னணி என்ன…?

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…

29 minutes ago

பகீர்… மைனர் மருமகளைக் கடத்தி கட்டாயத் திருமணம்… போலீசுக்கு பயந்து விஷம் கொடுத்த கணவன்… சிறுமி பரிதாப பலி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் கந்வா மாவட்டத்தில் உறவுமுறையை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பந்தானா பகுதியைச்…

40 minutes ago

“ரூ.30 ஆயிரம் கடனுக்காக கொடுத்த ஆதார்… பஞ்சர் கடைக்காரர் பெயரில் ரூ.28 கோடி ஜிஎஸ்டி மோசடி… அதிர்ச்சி பின்னணி…!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் பஞ்சர் கடை நடத்தி வரும் ராஜ் பிரஜாபதி என்ற ஏழைத் தொழிலாளியின் அடையாள அட்டைகளைப்…

46 minutes ago

காலையிலேயே குட் நியூஸ்.. கடன் முழுவதும் தள்ளுபடி.. தமிழக மக்களுக்கு CM விஜய் இன்ப அதிர்ச்சி…!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி,…

57 minutes ago