தாஜ்மஹால் உலக அதிசயமா… அல்லது சிவன் கோவிலா… ஹைகோர்ட் நோட்டீஸால் பரப்பரப்பு…!

Spread the love

உலக அதிசயங்களில் ஒன்றாகவும், யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாகவும் விளங்கும் தாஜ்மஹால், உண்மையில் ‘தேஜோ மஹாலயா’ என்ற சிவன் கோவிலாக இருந்தது என்று கூறி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறைக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. இதனால் தாஜ்மஹால் குறித்த வரலாற்றுச் சர்ச்சை மீண்டும் நாடு முழுவதும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

முகலாய மன்னர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் கட்டிய உலகப் புகழ்பெற்ற நினைவுச் சின்னமே தாஜ்மஹால் என்பது வரலாற்றுப் பதிவாக உள்ளது. இருப்பினும், தாஜ்மஹால் இருந்த இடத்தில் முன்னதாக ஒரு சிவன் கோவில் இருந்ததாக ஒரு தரப்பினர் தொடர்ந்து உரிமை கோரி வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய சட்டப் போராட்டம் தொடங்கியுள்ளது.

அக்ரேஷ்வர் மகாதேவ் நக்நாதீஸ்வர் விராஜ்மான் சார்பில் வழக்கறிஞர் ஹரி சங்கர் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “தாஜ்மஹால் அமைந்துள்ள இடத்தில் கி.பி. 1155-1156 ஆம் ஆண்டுகளில் ராஜா பரமர்தி தேவ் என்பவரால் ‘தேஜோ மஹாலயா’ என்ற சிவன் கோவில் கட்டப்பட்டது. எனவே, தாஜ்மஹாலை முழுமையாகப் பார்வையிட்டு, புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய ஒரு வழக்கறிஞர் ஆணையரை நீதிமன்றம் நியமிக்க வேண்டும். வெறும் கட்டடக்கலை அம்சங்களை மட்டும் பார்க்காமல், அது சிவனுக்கான கோவிலா என்பதை அறிவியல் பூர்வமாகத் தீர்மானிக்க இந்த ஆய்வு அவசியம்” என்று கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரஞ்சன் அகர்வால், நீதிமன்றத்தின் சார்பில் ஆய்வு செய்யக் குழு அமைப்பது குறித்து மத்திய அரசும், இந்திய தொல்லியல் துறையும் தங்களது பதிலை மனுவாகத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தாஜ்மஹாலின் அடியில் மறைந்திருக்கும் உண்மைகள் என்ன என்பது குறித்த விவாதங்கள் பொதுவெளியிலும், சமூக ஊடகங்களிலும் தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளன.

SATHISH R

Share
Published by
SATHISH R

Recent Posts

ரோட்டில் நடக்கும் போது உஷார்… மின்னல் வேகத்தில் வந்த கார்… நொடியில் மாறிய இளைஞரின் தலைவிதி… இணையத்தை அதிரவைக்கும் CCTV காட்சி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…

6 minutes ago

இனி இதுதான் கதியா?… வெறிச்சோடி கிடந்த கவுண்டர்கள்… SBI கிளையில் காத்திருந்து நொந்துபோன மக்கள்… வாக்குவாதத்தால் பரபரப்பு…!!

வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…

10 minutes ago

காரணம் தெரிந்தால் ஷாக் ஆவீங்க!… இப்படியும் ஒரு காதலா?… நடுரோட்டில் காதலனுக்கு தண்ணி காட்டிய இளம்பெண்… ஸ்தம்பித்த நெடுஞ்சாலை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…

16 minutes ago

ரகசிய டீ பார்ட்டி… போட்டுக் கொடுத்த மர்ம நபர்… உணவகத்திற்குள் புயலென நுழைந்த மனைவி… கணவனுக்கும் தோழிக்கும் விழுந்த சரமாரி அடி…!!

சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…

22 minutes ago

இதயம் இன்னும் படபடக்குது… இருளில் நேரில் கண்ட திகில் காட்சி… ஆன்மாவையே நடுங்க வைத்த அந்த ஒரு நொடி… தீபாவளி அமாவாசை இரவில் நடந்தது என்ன?…!!

தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…

28 minutes ago

இப்படியொரு துணிச்சலா?… வாகனத்திலிருந்து பையை அபேஸ் செய்த மர்ம நபர்… சிக்கன் கடை வாசலில் நடந்த பகீர் சம்பவம்…!!

சூரியபேட்டை மாவட்டம் நெரேடுசெர்லா பகுதியில் உள்ள காந்தி சிக்கன் சென்டர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ வாகனத்திலிருந்து மர்ம நபர் ஒருவர்…

34 minutes ago