உத்திரபிரதேசம் மாநிலம் அலிகாரியில் வெளிவந்த ஒரு கொடூர தாக்குதல் குறித்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் மீது நடக்கும் கொடூர வன்முறை காட்சியை பொதுமக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அலிகாரியிலுள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வீடியோவில் பெண்ணை தாக்கியவர்கள் அவருடைய கணவர் மற்றும் மைத்துனர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் இந்த தாக்குதலுக்கான உரிய காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில், ஒரு ஆண் அந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுக்கும் காட்சியை தெளிவாக பதிவாகியுள்ளது.
பிறகு அவர் பெண்ணின் மார்பில் அமர்ந்து தாக்குகின்றார். அருகில் இருந்த மற்றொரு நபர் அவர்களை பிரிக்க முயற்சி செய்கிறார். சில வினாடிகள் கழித்து மற்றொரு நபர் மரக்கட்டையுடன் வந்து தாக்குகின்றார். இந்த காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் போலீசார் உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளனர். பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை மீண்டும் எழுப்பி உள்ள இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…