ஆன்லைனில் சரக்கு ஆர்டர்…. இரண்டே நாளில் ரூ.20 லட்சம் கலெக்‌ஷன்… மாஸ் காட்டும் தவெக அரசின் அதிரடி QR Code திட்டம்…!

Spread the love

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாகப் பல புகார்கள் எழுந்து வந்தன. இந்த முறைகேட்டைக் கட்டுப்படுத்தி, விற்பனையில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவரும் நோக்கில் தவெக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கூடுதல் கட்டண வசூலைத் தடுக்க டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதே வேளையில், வாடிக்கையாளர்கள் நேரடியாக MRP விலையிலேயே மதுபானங்களைப் பெறுவதற்கான நவீனத் தொழில்நுட்ப மாற்றங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் முக்கியப் பகுதியாக, வீற்றிருந்தபடியே மதுபானங்களை முன்பதிவு செய்யும் புதிய ஆன்லைன் இணையதளத் திட்டத்தை அண்மையில் அரசு தொடங்கியது. இதன் மூலம் மதுப்பிரியர்கள் தங்கள் மொபைல் அல்லது கணினி வாயிலாக அருகில் உள்ள கடைகளில் என்னென்ன மதுபானங்கள் இருப்பு உள்ளன என்பதை எளிதில் அறிந்து கொள்ள முடியும். ஆன்லைனில் முன்பதிவு செய்து தொகையைச் செலுத்தியவுடன் ஒரு QR Code உருவாக்கப்படும். இந்த QR Code-ஐ டாஸ்மாக் கடையில் காட்டி மதுபானங்களைப் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தால் கூடுதல் கட்டணம் செலுத்துவது தவிர்க்கப்படுவதோடு, தங்களுக்குத் தேவையான பிராண்டுகளையும் எளிதாகத் தேர்வு செய்ய முடிகிறது.

கடந்த 7-ஆம் தேதி தொடங்கப்பட்ட இப்புதிய முறைக்கு மக்களிடையே கணிசமான வரவேற்பு கிடைத்துள்ளது. அறிமுகமான முதல் நாளிலேயே ஆன்லைன் மூலம் ரூ.11.62 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனையாகின. இரண்டாம் நாளான 8-ஆம் தேதி சுமார் 3,000 முன்பதிவுகள் செய்யப்பட்டு ரூ.9 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது. இதன் மூலம் தொடக்கம் பெற்ற முதல் இரண்டு நாட்களிலேயே ஆன்லைன் வழியில் மட்டும் ரூ.20 லட்சத்திற்கும் அதிகமான தொகையிலான மதுபானங்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன.

Nanthini

Recent Posts

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

1 மணத்தியாலம் ago

ஐயோ… என்னது இது?… ரயிலில் பயணியின் உணவில்… கிடந்த உலோகத் துண்டு… ஊழியர் கொடுத்த விளக்கம்… IRCTC-யின் அதிரடி ஆக்‌ஷன்…!

குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…

1 மணத்தியாலம் ago

திக் திக் நிமிடங்கள்… எதுவுமே வேலை செய்யல?… ரயில் விபத்திற்கு நொடிக்கு முன் இன்ஜின் அறையில்… ஓட்டுநர் கதறிய பகீர் வீடியோ… இணையத்தில் வைரல்…!

அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… 150 கோடியை நெருங்கும் இந்திய மக்கள் தொகை… வைரலாகும் டெல்லி AIIMS டிஜிட்டல் பலகை…!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

2 மணத்தியாலங்கள் ago

காரை நிறுத்தச் சொன்ன காவலரை 200 மீட்டர் தூரம் பறக்கவிட்ட ஓட்டுநர்….. மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…

2 மணத்தியாலங்கள் ago

“ஐயோ சாவு இப்படியா வரணும்?”…. கண் இமைக்கும் நேரத்தில் முடிந்த நாட்டிய கனவு… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் ஷாக்கிங் வீடியோ….!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…

2 மணத்தியாலங்கள் ago