தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல், கடந்த சில ஆண்டுகளாக தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வந்தார். மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்று அவர் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர், பனையூரில் நடிகர் விஜய்யின் காரை வழிமறிக்க முயன்றும் பலன் கிடைக்கவில்லை. மேலும், கட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.
நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று அஜிதா ஆக்னல் கடைசி வரை காத்திருந்தார். ஆனால், சமீபத்தில் வெளியான தவெக வேட்பாளர் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனால் மிகுந்த மனவேதனையடைந்த அவர், கட்சியில் தமக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்று கருதி தவெகவில் இருந்து விலக முடிவெடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று தூத்துக்குடியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை நேரில் சந்தித்த அஜிதா ஆக்னல், தனது ஆதரவாளர்களான 150-க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் முறைப்படி திமுகவில் இணைந்தார். அவருக்கு கனிமொழி எம்பி சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜிதா, தவெகவில் பெண்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் இல்லை என்றும், இரண்டு ஆண்டுகள் தீவிரமாக உழைத்தும் அவமதிக்கப்பட்டதாலேயே தாம் திமுகவில் இணைந்ததாகவும் தெரிவித்தார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…