புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?.. ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசை வென்ற அஜித் மகன் ஆத்விக்.. ஷாலினி பகிர்ந்த வீடியோ..!

Spread the love

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருப்பவர் தான் நடிகர் அஜித். இவருடைய நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட விடா முயற்சி திரைப்படம் கடைசி நேரத்தில் ரிலீஸ் ஆகாமல் போனது. இந்த தகவல் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை பார்க்க ஆவலோடு காத்திருந்த ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படம் மீதான ஆர்வத்தையும் தூண்டி உள்ளது. அஜித் முந்தைய படங்களை விட இந்த படத்தில் அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகளில் நடித்து மிரள வைத்திருந்தார்.

அதே அளவில் எமோஷனலான காட்சிகளும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்று இருந்தன. இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஹாலிவுட் படமான பிரேக் டவுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை லைகா நிறுவனத்தின் சார்பாக சுபாஷ்கரன் அல்லி ராஜா தயாரித்துள்ளார். சுமார் 250 கோடி முதல் 300 கோடி வரையிலான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு வெளியான துணிவு திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே அஜித் நடித்து முடித்துள்ள மற்றொரு படமான குட் பேட் அக்லி திரைப்படமும் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள நிலையில் நடிகை திரிஷா தான் இந்த படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படியான நிலையில் அஜித் தற்போது தீவிரமாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். துபாயில் நடந்து முடிந்த 2025 ரூபாய் 24 ஹார்ஸ் கார் ரேஸில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார். இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் இருந்து அஜித்துக்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

 

இப்படி அப்பா ஒரு பக்கம் கார் ரேஸில் கலக்கி கொண்டிருக்கும் நிலையில் இப்போது மகனும் கலக்கியுள்ளார். ஏற்கனவே அஜித் மற்றும் ஷாலினி தம்பதியின் மகன் ஆத்விக் கால்பந்தில் கலக்கி கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஓட்டப்பந்தயத்தில் ஓடி முதல் பரிசை வென்றுள்ளார். அது தொடர்பான வீடியோவை ஷாலினி இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருவது மட்டுமல்லாமல் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என கமெண்ட்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

 

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

10 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

11 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

11 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

12 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

12 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

12 மணத்தியாலங்கள் ago