தமிழ்நாட்டில் செல்லப்பிள்ளையான காதல் மன்னன் அஜித் குமாராக சில வருடங்கள் பயணித்து அதன் பின் அல்டிமேட் ஆக மாறி கடைசியில் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள தல அவர்கள் 1990 ஆம் ஆண்டு ‘என் சாஹர் என் வீடு’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய அஜித் , பின்னர் அவர் முதல் படமான அமராவதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து, சில தெலுங்குப் படங்களில் நடித்து வந்தார், பிறகு தான் ராஜாவின் பார்வையில் பவித்ரா போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படங்கள் சரியாகப் போகாததால், விரக்தியில் சினிமாவை விட்டு விலக அஜித் முடிவு செய்தபோது, இயக்குநர் வசந்த் இயக்கும் ‘ஆசை’ வாய்ப்பு அஜித்துக்கு வந்தது.ஆனால் இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும் என்று அஜித் எதிர்பார்க்கவில்லை. இந்தப் படம் அஜித்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய நிலையில், அவர் வான்மதி, கோலேஜ் வாசல், மைனர் மாப்பிள்ளை, நேசம், ராசி போன்ற பல படங்களில் நடித்தார். இதில் சில படங்கள் தோல்வியடைந்தாலும் சில வெற்றி பெற்றன. அதேபோல் அஜித்துக்கும் மாபெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
தமிழ் திரையுலகில் பலரையும் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு உயர்ந்துள்ள அஜித் தனது பழைய பேட்டியில் , ‘ஆசை’ படம் எனக்கு வரவில்லை, முதலில் சூர்யா தான் இப்பட வாய்ப்பு வந்தது. சூர்யா ஆசையில் முக்கிய வேடத்தில் நடிக்க அவரை அணுகியுள்ளார். அப்போது சூர்யா கார்மென்ட்ஸ் தொழில் செய்து வந்தார். எனவே வசந்த் கேட்ட போது நடிக்க மறுத்துவிட்டார்.
சூர்யா நடிக்க முடியாது என்று கூறியதையடுத்து, அமராவதியை பார்த்த வசந்த், அஜித் இப்படத்தின் வரும் கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்துவார் என்று அவரை அணுகினார். தொடர்ந்து அவரை வைத்து படத்தை எடுத்து முடித்தார். சூர்யா மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டிய போது, அவர் வசந்த் இயக்கத்தில் ‘நேர்க்கு நேர்’ படத்தில் நடித்தார் என்று அஜித் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…