Categories: சினிமா

‘லால் சலாம்’ படத்தை பார்த்து அப்சட் ஆன தயாரிப்பாளர்.. அப்பாவை கூட்டிக்கொண்டு கிளம்பிய ஐஸ்வர்யா ரஜினி.. என்ன நடந்தது..?

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் ரஜினியின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. இவர் சினிமாவில் இயக்குனராக இருந்து வரும் நிலையில் தன்னுடைய முன்னாள் கணவர் தனுஷை வைத்து 3, கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதனைத் தவிர ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் உன் மேல ஆசைதான் என்ற பாடலையும், அந்தப் படத்தில் ரீமாசென்க்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்துள்ளார். இந்த நிலையில் சினிமாவில் ஏதாவது சாதித்து விட வேண்டும் என்று நினைக்கும் ஐஸ்வர்யா ரஜினி தனது திருமண பந்தத்தில் இருந்து முற்றிலும் வெளியேறிய பிறகு பயணி என்ற மியூசிக்கல் வீடியோவை இயக்கினார்.

அதனைத் தொடர்ந்து கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு லால் சலாம் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார் . இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு திருவண்ணாமலை, சென்னை மற்றும் மும்பை ஆகிய பல இடங்களில் நடந்து முடிந்தது. போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் வெளியாக உள்ள நிலையில் நேற்று ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு லால்சலாம் பட குழு அவர் நடித்த காட்சிகளை டீசர் போல் கட் செய்து அதன் கிளிம்ப்சை வெளியீட்டு உள்ளது. இந்த நிலையில் படத்தை பார்த்த தயாரிப்பு நிறுவனம் இதில் ரஜினி வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு பிடித்தது போல் இல்லை எனவும் இதை பார்த்தால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து விடுவார்கள் என்பதால் மீண்டும் ரஜினி வரும் காட்சிகளை படமாக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இதனால் ரஜினியிடம் ஐஸ்வர்யா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இன்று முதல் மீண்டும் ஐந்து நாட்களுக்கு லால் சலாம் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தி ரஜினி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. அதாவது லால் சலாம் திரைப்படத்தில் ரஜினி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை உற்சாகப்படுத்துவார் என எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனமே அந்த காட்சிகளை பார்த்து பிடிக்கவில்லை என்று கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அசுர வேகம்…! உயிர் தப்பிய பைக் ஓட்டுநர்… நடுரோட்டில் புரண்ட கன்டெய்னர்… மரண பயத்தை காட்டிய விபத்து… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!!

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…

5 minutes ago

செகண்ட்ல காலி… அலறிய ரயில் ஹார்ன்… காதுல இயர்போன்… பின்னாடி வந்த மரணம்… நொடியில் முடிந்த உயிர்… நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி…!!

ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…

12 minutes ago

அடுத்து யார் டார்கெட்?… மறுஆய்வு மனு தள்ளுபடி… திமுக புள்ளிகளுக்கு அடுத்தடுத்து செக்… கதவை தட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் கே.என்.நேரு…!!

திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்…

21 minutes ago

அடகடவுளே..! இடித்து தள்ளிவிட்டு எஸ்கேப்!… உயிருக்கு போராடும் இளைஞர்… நிற்காமல் பறந்த ஃபார்ச்சூனர்… பதறவைக்கும் CCTV காட்சிகள்…!!

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பாசாபுரா பகுதியில், அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று மோட்டார் சைக்கிள்…

28 minutes ago

“கொஞ்சம் சோலே அதிகமா தாங்க”… உணவகத்தில் நடந்தது என்ன?… கத்தியால் சரமாரியாக குத்தப்பட்ட டிரைவர் பலி… பயங்கர கொடூர கொலை…!!

டெல்லியில் சாலையோர உணவகம் ஒன்றில் கூடுதல் சோலே கேட்ட ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்…

36 minutes ago

ஷாப்பிங் சென்ற தாய்… மாயமான தங்க நகை… 8 மாதக் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்… கடையில் நடந்த பகீர் சம்பவம்… சிசிடிவியில் சிக்கிய கொடூரம்…!!

போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…

44 minutes ago