Categories: சினிமா

திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்… வீடியோ எடுப்பதை பார்த்து வெட்கப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல்..!!

Spread the love

பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான அசத்துப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக திரைத்துறையில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.

அதன் பிறகு கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார். மேலும் அதில் வெற்றி பெற்றார். கடந்த 2010-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன நீ தானா அவன் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு கடந்த 2012-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன அட்டகத்தி திரைப்படம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு புகழைத் தேடித் தந்தது. பின்னர் டாடி என்றால் ஹிந்தி திரைப்படத்தில் நடித்தார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு ரிலீசான காக்கா முட்டை திரைப்படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கப்பட்டது. இவர் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். அட்டகத்தி, ரம்மி, திருடன் போலீஸ், பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை உள்ளிட்ட படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யாவது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் ஐஸ்வர்யா தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு பத்திரிகையாளர்கள் எடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சுற்றி சுற்றி வீடியோ எடுப்பதை பார்த்ததும் வெட்கத்தில் ஐஸ்வர்யா சிரிக்கிறார். அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர்.

admin

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

1 மணத்தியாலம் ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

1 மணத்தியாலம் ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

2 மணத்தியாலங்கள் ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

2 மணத்தியாலங்கள் ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

2 மணத்தியாலங்கள் ago