விஜய் தொலைக்காட்சியில் பெரும் ஆரவாரத்துடன் துவங்கிய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. பிக் பாஸ் வீட்டில் மிகுந்த எதிர்பார்ப்புடன் நுழைந்து மாயா gang -ல் சேர்ந்து தனது பெயரை முழுவதுமாக கெடுத்துக் கொண்டவர் தான் ஐஷு. மேலும் இவர் நிக்சனுடன் விளையாடிய காதல் விளையாட்டும் ரசிகர்களை எரிச்சலடைய வைத்தது. இவர்கள் பிக் பாஸ் வீட்டில் குறுக்கே கண்ணாடி இருக்க இருவரும் மாறி மாறி முத்தம் குடுத்து கொண்டது,
இதைத்தொடர்ந்து ஐஷு வேட்டி அணிந்திருக்க அதை சரிசெய்ய நிக்சன் முழங்கால் வரை தூக்கி கையை விட்டு சரி செய்தது என பல எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டனர். இப்படி ஒரு பக்கம் நிக்சனின் சேர்க்கை, மறுபுறம் மாயா gang உடன் சேர்க்கை என ரசிகர்களின் வெறுப்பை மொத்தமாக சம்பாதித்தார் ஐஷு. இதனால் அவர் மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகள் பெற்று கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் அவர் முதன் முதலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் வீட்டில் தான் செய்த அனைத்து தவறுகளுக்கும் மொத்தமாக மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் குறிப்பாக பிரதீபுக்கு ரெட் கார்டு கொடுத்ததற்காக அவருடன் மன்னிப்பும் கேட்டுள்ளார். தற்பொழுது அவரின் இந்த பதிவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, ‘பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்ததற்காக உண்மையிலேயே நான் வருந்துகிறேன். அவருடைய நல்ல நோக்கங்களை இப்போது நான் புரிந்து கொண்டேன். சில நட்புகள் தவறான தொடர்புகள் மற்றும் நான் எடுத்த தவறான முடிவுகள் என்னை குருடாக்கிவிட்டது. எது சரி, எது தவறு என்று தெரிந்தும் உண்மையை கவனிக்க நான் தவறிட்டேன்’ என்று பகிரங்கமாக மன்னிப்புக்கு கேட்டுள்ளார். இதோ அந்த பதிவு…
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில், நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்…
பிரசவத்தின்போது தாய் உயிரிழந்ததால், குறைமாதத்தில் பிறந்த அந்தப் பச்சிளம் குழந்தை தனிமையில் தவித்தது. பிறந்த கணத்திலிருந்தே தாயின் அரவணைப்பைத் தேடி…
மும்பை புறநகர் மின்சார ரயிலில் 20 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில்…
நவம்பர் 6 அன்று, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள வல்ஹல்லா அருகே உள்ள காட்டில், தனது சகோதரருடன் முகாம் இட்டிருந்த…
பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஃபிரெஷ் ஃபுட் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா பி.சி., தனது ஊழியர்கள் சொந்தமாகத்…
அகாசா ஏர் விமானத்தில் பயணித்த கைக்குழந்தையை, நிஷாந்த் என்ற விமானப் பணிப்பெண்/பணியாளர் தனது கைகளில் ஏந்தி நடந்து சென்று சமாதானப்படுத்திய…