தமிழகத்தில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட செங்கோட்டையனின் அடுத்த கட்ட நகர்வு என்பது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் அவர் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை சந்தித்திருந்த நிலையில் மொத்தமாக அவரை கட்சியிலிருந்து நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்பது குறித்து பல தகவல்கள் வெளியானது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி விஜய் முன்னணியில் செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய உள்ளதாகவும் அதற்கு முன்பாக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என்றும் அவரது ஆதரவாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அது மட்டுமல்லாமல் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் சென்னை சென்றுள்ள நிலையில் நாளை தமிழக வெற்றிக்கழகம் கட்சிகள் இணையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் செங்கோட்டையன் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என்று மூத்த பத்திரிக்கையாளர் ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார். மேலும், இது நடக்கும் பட்சத்தில் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் உள்ள அதிருப்தி அதிமுகவினரை தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைக்கும் பணியை மேற்கொள்வார். ஏற்கனவே ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் நீக்கப்பட்டதால் வாக்கு சதவீதம் குறைந்தது. இனி அதிமுகவுக்கு 20% வாக்குகள் கிடைப்பதே கடினம் என்று அவர் கூறியுள்ளது புதிய பரபரப்பை கிளப்பி உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிக்கான டெண்டர், ராசி பில்டர்ஸ் நிறுவனத்திற்கு…
ஆந்திரப் பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியில், தொழிலதிபர் கோட்டி வீர நாகய்யா என்பவர் திருமணமாகியும் மற்றொரு பெண்ணுடன் வசித்து…
சீனாவின் ஹெபேய் மாகாணத்தில் நடந்ததாகக் கூறி சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சி தரும் கொடூர வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. ஓட்டுநர்…
தமிழக அரசியலில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி தவெக ஆட்சியைப் பிடித்திருக்கும் சூழலில்,…
இந்தியா போன்ற பாரம்பரியமிக்க சமூகங்களில், காதல் விவகாரங்கள் இன்னும் கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் குடும்ப மானப் பிரச்சனைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றன. அந்த…
சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம்…