மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். கரூரில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாமல், அறையில் அமர்ந்து கொண்டு விஜய் அரசியல் செய்வது முறையல்ல என்று சாடினார். நடிகர்கள் தங்களது முகத்தை வைத்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைப்பதாகவும், திரையில் 10 பேரை அடிப்பது போல் நிஜ அரசியலில் செயல்பட முடியாது என்றும் அவர் தடாலடியாகப் பேசினார்.
விஜய்யின் அரசியல் செயல்பாடுகளை ‘அழிச்சாட்டியம்’ என்று குறிப்பிட்ட செல்லூர் ராஜூ, இதைப் பார்த்தால் அரசியலை விட்டே ஓடிவிடலாம் போலத் தோன்றுகிறது என்று கிண்டலாகத் தெரிவித்தார். விஜய்யை வைத்துப் படம் எடுத்த தயாரிப்பாளர்கள் இன்று தெருவில் நிற்பதாகவும், ஆனால் எம்.ஜி.ஆர் மட்டுமே ‘மினிமம் கேரண்டி’ கொண்ட நடிகராகத் திகழ்ந்ததாகவும் அவர் ஒப்பீடு செய்தார். மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு நடிகருக்கான ‘மாஸ்’ இல்லை என்றாலும், மக்கள் மற்றும் விவசாயிகள் அவரைத் தங்கள் நண்பராகப் பார்ப்பதால் அவருக்குத் தொகுதி வாரியாகக் கூட்டம் கூடுவதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
திமுக தலைமையிலான கூட்டணி பலவீனமானது என்றும், அங்குள்ள கட்சிகள் ‘தாலிக்கட்டிய மனைவி’ போல் அடங்கி ஒடுங்கி இருப்பதாகவும் அவர் விமர்சித்தார். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சாட்டிய செல்லூர் ராஜூ, ஜாபர் சாதிக் போன்ற நபர்களுடன் முதல்வர் மற்றும் துணை முதல்வர் புகைப்படம் எடுத்துக் கொள்வதைச் சுட்டிக்காட்டினார். அதிமுக யாருக்கும் அடிமை இல்லை என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் எழுச்சியைக் கண்டு முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுவதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
குரு பகவான் இன்று அதிகாலை புனர்பூச நட்சத்திரத்தில் பிரவேசித்துள்ள நிலையில், இதனால் மிதுனம், கடகம், சிம்மம், துலாம் மற்றும் தனுசு…
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…