திமுக தேர்தல் வாக்குறுதியில் விவசாயக் கடன் தள்ளுபடி குறித்து அறிவிக்காததற்கான காரணத்தை அமைச்சர் எ.வ.வேலு சட்டமன்றப் பேரவையில் விளக்கமளித்துள்ளார். சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் சுமார் ரூ.19,000 கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது குறித்து அன்றைய நிதித்துறைச் செயலாளருடன் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கு நிதித்துறைச் செயலாளர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டதே இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் என்றும் தெளிவுபடுத்தினார்.
நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த நிர்வாக ரீதியிலான முடிவை சுட்டிக்காட்டி, திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் இத்திட்டம் இடம்பெறாததற்கான உண்மையான பின்னணியை அவர் அவையில் பதிவு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே 19 வயது இளம்பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, மண்டபத்தில் திருமண…
தமிழக அரசியலில் இடைத்தேர்தல்னாலே ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்றொரு பரவலான பேச்சு உண்டு. அரசு அதிகாரம், நிர்வாக இயந்திரம், தேர்தல் வியூகங்கள்…
பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் சூழலில், இத்திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள்…
மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், கடந்த வாரம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற…
பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி…
தேசிய அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக எம்பி கனிமொழியின் அடுத்தடுத்த…