தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் தொடங்கி இன்றுவரை முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் கமல்ஹாசன். இறுதியாக மணிரத்தினம் இயக்கத்தில் உருவான தக் லைஃப் திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்திருந்த நிலையில் இவருடன் இணைந்து சிம்பு, திரிஷா, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நாயகன் படத்திற்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து மீண்டும் மணிரத்தினம் கூட்டணி அமைந்த நிலையில் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் பேசிய பேச்சும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான நிலையில் கர்நாடகாவில் படம் வெளியாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. பல தடைகளுக்குப் பிறகு இந்த திரைப்படம் வெளியான நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு வசூலை பெறவில்லை. இப்படியான நிலையில் தற்போது கமல் குறித்து எதுவும் தகவல் இல்லாமல் உள்ளது. இது தொடர்பாக வெளியான தகவலில் கமல் தற்போது சொந்த ஊரில் இல்லையாம். அமெரிக்கா சென்றுள்ள கமல் அடுத்ததாக அன்பரவி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவிலிருந்து ஜூலை மாதம் கமல் திரும்புவார் என்றும் ஆகஸ்ட் மாதம் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிகிறது. மேலும் தற்போது அவர் மாநில சபை உறுப்பினர் அதாவது எம்பியாக பதவி ஏற்றுள்ளார். பாராளுமன்றத்தில் பதவி ஏற்பு, பிரமாண விழா, அரசியல் நிகழ்ச்சிகள் என அவர் தற்போது அதில் பிசியாக இருப்பார். இதனால் ஆகஸ்ட் மாத இறுதியில்தான் அவர் அடுத்த திரைப்படத்தில் இணைவார் என தெரிகிறது. இது குறித்து கோடம்பாக்கத்தில் பேசும்போது எம்பி ஆகும் கனவு அவருக்கு பெரிதாக இருக்கலாம், ஆனால் போன பிறகுதான் புரியும், இதற்கு தான் அவர் ஆசைப்பட்டார் என்று பலரும் கிண்டலாக பேசி வருகின்றனர்.
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…