தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக கமலஹாசன் மற்றும் நடிகர் ரஜினி இருவரும் வலம் வந்து கொண்டுள்ளனர். நடிகர் கமலஹாசன் தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அது மட்டுமின்றி விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
‘இந்தியன் 2’ திரைப்படத்தை லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பிரசாந்த் ஸ்டூடியோவில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இவரைப் போலவே நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘தலைவர் 170’ திரைப்படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘தலைவர் 170’ திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ரஜினி திரைப்படத்தின் சூட்டிங்கும் சென்னை பிரசாந்த் ஸ்டூடியோவில் தான் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டு முன்னணி நடிகர்களும் தற்போது சென்னை பிரசாந்த் ஸ்டூடியோவில் ஒன்றாக சந்தித்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
21ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒன்றாக படப்பிடிப்பு தளத்தில் சந்திப்பதாக இணையத்தில் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை லைக்கா நிறுவனம் தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இப்புகைப்படங்களை முதலில் பார்த்த ரசிகர்கள் இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பி வந்தனர்.
ஆனால் பின்னர் தான் புரிந்தது.தனித்தனி படத்தில் நடிக்கும் இருவரும் சந்தித்தபோது எடுத்துக் கொண்டபுகைப்படம் என்று. தற்பொழுது இப்புகைப்படத்தினை ரஜினி, கமல் ரசிகர்கள் உற்சாகமாக வைரலாக்கி வருகின்றனர்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…