பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் குமரன் 10 வருடங்களுக்குப் பிறகு தனது சொந்த ஊருக்கு சென்று பொங்கல் கொண்டாடிய புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் தற்போது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் கூட்டுக் குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தில் உள்ள நான்கு அண்ணன் தம்பிகள் எவ்வளவு பாசமாகவும், ஒற்றுமையாகவும் உள்ளனர் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. தற்பொழுது சீரியலில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினருக்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் சமாளித்து அவர்கள் எப்படி பழைய நிலைமைக்கு வருகின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் தற்போது இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் நடிகர் குமரன். இவர் நடனத்தின் மீது மிகவும் ஆர்வம் கொண்டவர் .விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திறமையை நிரூபித்தா.ர் தற்பொழுது இவர் நடிப்பிலும் அசத்தி கொண்டு வருகிறார். சின்னத்திரையை தாண்டி தற்பொழுது வெள்ளி திரையிலும் நடிகராக ‘வதந்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் கால் பதித்துள்ளார்.

இந்த சீரியலில் இவரது கதாபாத்திரத்திற்கு மக்களிடத்தில் அதிகமான வரவேற்பு உள்ளது. தற்பொழுது 10 வருடங்களுக்குப் பிறகு தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்று இவர் பொங்கலை கொண்டாடியுள்ளார். அங்கு தனது சொந்த வீட்டின் முன் நின்று தனது அப்பா நெற்றியில் பொட்டு வைக்கும் போது எடுக்கப்பட்ட அழகான புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்…
View this post on Instagram
