தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே நிலத்தகராறில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த தங்கை, தனது சொந்த அண்ணனாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொய்னாபாத் அடுத்த கெய்திரெடிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சாந்தையா என்பவருக்கு வெங்கட்டம்மா, மல்லம்மா என இரு மனைவிகள். இதில் முதல் மனைவி வெங்கட்டம்மாவின் மகள் சொப்னா சட்டப்படிப்பு முடித்து வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். மகன் ராஜு வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். சாந்தையா மறைவுக்குப் பிறகு, அவருக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தைப் பிரிப்பதில் அண்ணன் – தங்கை இடையே மோதல் வெடித்தது.
தாயின் சமரசப்படி ராஜுவிற்கு 6 ஏக்கர் மற்றும் சொப்னாவிற்கு 4 ஏக்கர் எனப் பிரிக்கப்பட்டது. ஆனால், மொத்த நிலத்தையும் அபகரிக்கத் திட்டமிட்ட ராஜு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சொப்னா மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்ய முயன்றார். இதில் காயங்களுடன் உயிர் தப்பிய சொப்னா, மொய்னாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த அலட்சியமே தற்போது ஒரு உயிரைப் பறிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது.
சம்பவத்தன்று சொப்னா தனது தாயுடன் நிலத்தை அளவீடு செய்யச் சென்றபோது, அங்கு வந்த ராஜு தனது நண்பர்களுடன் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த ராஜு, தனது தங்கை மீது காரை ஏற்றியதுடன், கத்தியால் அவரது கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றார். தகவல் அறிந்து வந்த போலீசார், சொப்னாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், ராஜு மற்றும் அவரது நண்பர்கள் உட்பட நான்கு பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தக் கொடூரக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சொப்னா முதல்முறை புகார் அளித்தபோதே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அசம்பாவிதத்தைத் தடுத்திருக்கலாம் என அவரது சக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையின் மெத்தனப்போக்கைக் கண்டித்தும், உயிரிழந்த வழக்கறிஞருக்கு நீதி கோரியும் சக வழக்கறிஞர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…