ஸ்டாலினின் திருட்டு ஆட்சிக்கு மரண அடி… மக்களுக்கு நல்லாட்சி வழங்கும் வரை ஓயமாட்டேன்… சபதம் எடுத்த இபிஎஸ்…!

Spread the love

தமிழக தேர்தல் களம் தற்போது சூடு பிடித்து விட்ட நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன. அதன்படி அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். முதல் கட்ட சுற்றுப்பயணத்தை சமீபத்தில் முடித்த எடப்பாடி பழனிச்சாமி இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றதில் மக்களின் குறைகளை கேட்டு அவர்களுடைய மனநிலையை அறிந்தேன். இந்த பயணத்தில் பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த விடியா தி.மு.க ஆட்சியாளர்களால் தாம் அனுபவித்து வரும் துன்பங்களையும் துயரங்களையும் மக்கள் கூறினர்.

மாய வலை பேச்சு, போட்டோ சூட், விளம்பரத்திற்காக கோடி கோடியாய் செலவு என இவை அனைத்தும் தான் இந்த ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. திமுகவின் நாடகங்களை எல்லாம் நாங்கள் நம்ப மாட்டோம். பேருக்காக திட்டத்தை அறிவித்து அரசு பணத்தில் தன் பெயரை ஸ்டாலின் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றார். ஸ்டாலின் ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். இந்த மோசமான தீய ஆட்சிக்கு முடிவு கட்டி நல்ல ஆட்சியை தர வேண்டும் என எண்ணை சந்தித்த அனைவரும் என்னை கேட்டுக் கொண்டனர். திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும் என்ற நம் இயக்கத்தின் சார்பில் புதிய பிரச்சாரத் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

திமுக ஆட்சியின் அவலங்களை ரிப்போர்ட் கார்டாக மக்கள் பூர்த்தி செய்து வழங்க உள்ளார்கள். மக்கள் ரத்தத்தை உறிஞ்சி கொண்டிருக்கும் திமுக ஆட்சியின் பொய்யான வாக்குறுதிகளையும் திறனற்ற ஆட்சியையும் மக்கள் கண்டு விரோத ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப ஒவ்வொரு தமிழ்நாடு மக்களும் முடிவு செய்து விட்டார்கள். அதற்கான நாட்களையும் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். சொன்னதை செய்யாத கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஸ்டாலின் அரசுக்கு மரண அடி கொடுப்போம். வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி மக்களுக்கு நிம்மதியான நல்லாட்சியை வழங்கும் வரை நான் ஓயமாட்டேன் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

“700 ரூபாய் வந்தே பாரத் டிக்கெட் வெறும் 380 ரூபாய்க்கு விற்பனை! ‘சைடு வருமானம்’ பார்த்த டிடிஇ அதிரடி சஸ்பெண்ட் – வைரல் வீடியோ பின்னணி..!!

வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வெறும் 380 ரூபாய்க்கு…

3 மணத்தியாலங்கள் ago

திக் திக்..! காட்டில் ஒரு நேரடி வேட்டை… நேரம் பார்த்து பசுவை குறிவைத்த சிங்கம்… மிரண்டுபோன சுற்றுலாப்பயணிகள்… இணையத்தில் வைரலாகும் அரிய வீடியோ…!!

குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக…

3 மணத்தியாலங்கள் ago

“கம்பெனிக்காரனே கலங்கிப்போயிருப்பான்!” சொகுசு பைக்கை லோடு வண்டியாக்கிய பெண்… “₹2 லட்சம் மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக்கில் பழைய இரும்பு வியாபாரம்… இணையத்தை அதிரவைத்த வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 'தேசி ஜுகாட்' (உள்ளூர்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: ​நீட் UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்.. சிபிஐ அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை..!!

நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு…

3 மணத்தியாலங்கள் ago

“டிரைவர் மகன் டூ அரசு கொறடா” விருகம்பாக்கம் சபரிநாதனுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கி முதல்வர் விஜய் அதிரடி..!!

தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான…

3 மணத்தியாலங்கள் ago

தவெக MLA தகுதி நீக்கம்..? ஆளுநருக்கு பறந்த பரபரப்பு கடிதம்… மறைக்கப்பட்ட அந்த உண்மை.. அதிர்ச்சியில் விஜய்…!!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…

3 மணத்தியாலங்கள் ago