“எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம்!” – கொங்கு மண்டலத்தில் அதிமுக காலி?…. புதிய பரபரப்பை கிளப்பிவிட்ட புகழேந்தி….!

Spread the love

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், புரட்சி அண்ணா திமுக நிறுவனர் புகழேந்தி கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் இந்த முறை அந்தக் கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என்று அதிரடியாகத் தெரிவித்தார். குறிப்பாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோரே தங்களது தொகுதிகளில் தோல்வியைத் தழுவுவார்கள் என்றும், அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி அல்லாத ஒரு தலைமை இருந்திருந்தால் மட்டுமே இந்தத் தேர்தலில் ஓரளவிற்காவது சவாலை (Tough) கொடுத்திருக்க முடியும் என்றும் அவர் விமர்சித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் மற்றும் துணை முதல்வர் குறித்து எடப்பாடி பழனிசாமி தரக்குறைவாகப் பேசி வருவதாகக் குற்றம் சாட்டிய புகழேந்தி, தேர்தல் ஆணையம் இதனை வேடிக்கை பார்ப்பது வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார். திமுக ஆட்சியில் இயற்கை பேரிடர்கள் வரவில்லை என எடப்பாடி கேட்பது நகைப்பிற்குரியது என்றும், நல்லாட்சி நடக்கும் இடத்தில் இத்தகைய பாதிப்புகள் குறைவாகவே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், திண்டுக்கல் சீனிவாசன் போன்ற மூத்த தலைவர்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருவது அதிமுகவின் தரம்தாழ்ந்த அரசியலையே காட்டுவதாகவும், இது தொடர்பாக தான் வழக்குப்பதிவு செய்துள்ளதால் எடப்பாடியின் பரப்புரை விரைவில் நிறுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் தாங்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற இந்தியக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக புகழேந்தி கூறினார். அண்ணாமலை மற்றும் பாஜகவின் அரசியல் தமிழகத்தில் எடுபடாது என்று குறிப்பிட்ட அவர், அதிமுக தற்போது டெல்லியின் நம்பிக்கையை மட்டுமே நம்பி இருப்பதாகவும், ஆனால் கள நிலவரம் அதற்கு எதிராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகம் அதன் பழைய கம்பீரத்தை இழந்துவிட்டதாகவும், எடப்பாடி பழனிசாமிக்குத் தைரியம் இருந்தால் தங்களை மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக மக்களிடம் முன்னிறுத்தட்டும் என்றும் அவர் சவால் விடுத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியலில் மதியத்திற்கு மேல் வெளியே வருவதில்லை என்ற விமர்சனத்தை முன்வைத்த புகழேந்தி, மக்கள் தலைவர்கள் எப்போதும் மக்களுடன் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள் என்றார். மேலும், அதிமுகவில் இருந்து விலகிச் சென்ற செங்கோட்டையன் போன்றவர்களால் தவெக-வில் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளத்தில் கசிந்தது குறித்த கேள்விக்கு, சென்சார் வாரியம் மத்திய அரசின் கையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சினிமாவைக் காட்டி அரசியல் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தான் படத்தைப் பார்த்த பிறகு விரிவான கருத்தைச் சொல்வதாகவும் கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.

Nanthini

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

1 minute ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

6 minutes ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

10 minutes ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

14 minutes ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

19 minutes ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

20 minutes ago