தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், தமிழக அரசியலில் பெரும் அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. தவெகவின் இந்த அசுர வளர்ச்சியைத் தொடர்ந்து, அதிமுகவின் முக்கிய எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். அந்த வரிசையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் தவெகவினரிடம் உருகிப் பேசிய சம்பவம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திருவொற்றியூர் பெரியார் நகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்களும், முக்கிய நிர்வாகிகளும் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர். அப்போது மேடையில் பேசிய அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர், தான் சுமார் 50 ஆண்டுகாலம் அதிமுகவில் பயணித்திருப்பதாகவும், பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளதாகவும் கூறி, தவெகவில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
அதிமுகவின் எதிர்காலம் குறித்துப் பேசிய அந்த நிர்வாகி, “இன்னும் 6 மாதங்களில் அதிமுக என்ற ஒரு கட்சியே தமிழகத்தில் இருக்காது” என்று அதிரடியான கருத்தை முன்வைத்தார். மேலும், தவெக தலைவர் விஜய் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், விரைவில் அவர் நாட்டின் பிரதமராகவும் உயர்வார் என்றும், ஒட்டுமொத்த உலகமே அவரைத்தான் வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் புகழாரம் சூட்டினார். தங்களுக்கு எந்தவித பதவியும் தேவையில்லை, வெறும் தொண்டர்களாக கட்சியில் பணியாற்றவே வந்துள்ளோம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேடையில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய அவர், “தயவுசெய்து எங்களை உங்களது கட்சியின் உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ளுங்கள்; உங்களின் காலைத் தொட்டுக் கூடக் கேட்டுக்கொள்கிறோம்” என்று தவெக நிர்வாகிகளிடம் கெஞ்சும் தொனியில் பேசினார். எடப்பாடி பழனிசாமியின் தலைமை தங்களுக்கு வேண்டாம் என்று கும்பிடு போட்டுவிட்டு தவெகவிற்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 30 முக்கிய நிர்வாகிகளின் பெயர்கள் மட்டுமே பட்டியலில் இருந்தபோதிலும், தங்களோடு சேர்த்து 300-க்கும் மேற்பட்டோர் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளதாகக் கூறி கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…