“எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்”…. ராஜாவா இருந்தவங்க தவெகவில் கூஜாக்களா?… முன்னாள் அமைச்சர்களைக் கிழித்துத் தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்….!

Spread the love

அதிமுகவில் செல்வாக்குமிக்க தலைவர்களாகவும் போர் படைத் தளபதிகளாகவும் வலம் வந்த முன்னாள் அமைச்சர்கள், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து தங்களது சுயமரியாதையை இழந்து பரிதாப நிலையில் நிற்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் ராஜாவாக வாழ்ந்த விராலிமலை விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.எஸ்.ஆனந்தன் போன்ற தலைவர்கள், இன்றைக்கு தவெகவில் வெறும் கூஜாக்களாக மாறி தவித்து வருவதாகச் சுட்டிக்காட்டினார்.

அதிமுக தொண்டர்கள் தங்கள் உழைப்பால் சம்பாதித்த பணத்தில் ரோஜா மாலைகளையும், பொன்னாடைகளையும் அணிவித்து, கைகளில் வீரவாள் கொடுத்து ‘ராசா’வாக அழகு பார்த்த வரலாற்றை அவர்கள் மறந்துவிட்டதாக உதயகுமார் வேதனை தெரிவித்தார். தங்களுக்குப் பெரும் பதவிகளும் ஆளுமையும் கிடைக்கும் என்று எதிர்பார்த்து, விஜய்யின் கருணைப் பார்வைக்காகத் தவமிருந்த இந்த முன்னாள் தளபதிகளுக்கு, போர்க்களத்திற்குச் செல்லும் வாய்ப்பை வழங்காமல் போர் கருவிகளைத் துடைத்து வைக்கும் அலங்காரப் பதவிகளையே தவெக வழங்கி உள்ளதாக அவர் கேலி செய்தார்.

தவெகவில் காலங்காலமாகப் பயணித்த உண்மையான தொண்டர்களுக்குக் கொள்கை காக்கும் பதவிகளை வழங்கியுள்ள விஜய், அதிமுகவில் இருந்து சென்றவர்களுக்குப் பதவித் தளத்தில் ‘திருநெல்வேலி அல்வா’ கொடுத்து ஏமாற்றிவிட்டதாகத் சாடினார். நன்றியையும், கோட்பாடுகளையும் மறந்தவர்களுக்கு இதுவே சரியான பாடம் என்றும், திரைப்பட நகைச்சுவைக் காட்சியைப் போல “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” என்ற நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுத் தவெகவின் புறம்போக்காகத் தவிப்பதைப் பார்க்கும்போது மனதிற்குச் சங்கடமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் காவிரி விவகாரம் மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான தவெகவின் கருத்துகளைச் சுட்டிக்காட்டிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களே இல்லாத ஒரு கட்சி, அனைத்துக் கட்சி கூட்டங்களைக் விமர்சிப்பது வேடிக்கையானது என்றார். ‘இருக்கிற இடத்தில் இருந்தால்தான் எல்லோருக்கும் மரியாதை’ என்பதை தவெகவின் தற்போதைய அறிவிப்புகள் முன்னாள் அமைச்சர்களுக்கு உணர்த்தியுள்ளதாகக் கூறிய உதயகுமார், மக்கள் நலனைக் காக்காமல் வாட்ஸ்அப் எண்களை வழங்கி ஏமாற்றும் போக்குகளை நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் மூலம் உயர்நீதிமன்ற மதுரை கிளையே அம்பலப்படுத்தியுள்ளதாகத் தனது பேச்சை நிறைவு செய்தார்.

Nanthini

Recent Posts

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

2 minutes ago

‘மனைவி, 7 வயது மகன் உள்பட 7 பேரை தீர்த்துக்கட்டி…” ஆட்டுக்கல்லால் அடித்து மலை பகுதியில் உடல்களை வீசிய நபர்… நடுங்க வைக்கும் பகீர் வீடியோ…!!

பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…

8 minutes ago

Real Life Money Heist!… 2 நிமிடத்தில் மாயமான கார்… உள்ளே இருந்த பணம் என்னாச்சு?… CCTV-க்கே தண்ணி காட்டிய பலே திருடர்கள்… நடுங்க வைக்கும் திருட்டு…!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…

21 minutes ago

16 ஆண்டு அரசியல் கொள்கைக்கு திடீர் செக்?…. சீமானின் ‘பொது வேட்பாளர்’ மாஸ்டர் பிளான்…. இடைத்தேர்தலில் காத்திருக்கும் டுவிஸ்ட்…!

கடந்த 16 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வந்த…

22 minutes ago

“கோடிக் கணக்கில் கொள்ளையா?…. பெரியார் அறிவுலகமா இல்லை ‘ஊழல் உலகமா”….. உலகமே கைகொட்டிச் சிரிக்கும் பகீர் ஊழல்…. கொதித்தெழுந்த முதல்வர் விஜய்….!

கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக…

28 minutes ago