Categories: சினிமா

ரகசியமாக திருமணத்தை முடித்த சித்தார்த் – அதிதி ஜோடி.. எங்கு தெரியுமா..?

Spread the love

பாய்ஸ் படம் மூலம் திரையுலகில் அறிமுகமான சித்தார்த் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படு பிசியாக நடித்து வந்தார். இந்தநிலையில் சித்தா படம் மூலம் தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் இவர் பிடித்தார். தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் சித்தார்த் நடிகை அதிதி ராவை காதலித்து வந்தார்.

Siddharth aditi

தெலுங்கு படம் ஒன்றில் இணைந்து நடித்த போது இருவரும் காதலில் விழுந்தனர். பல இடங்களில் ஜோடியாக சுற்றி திரிந்த இவர்கள், கல்யாணம் விழா, ஆடியோ லான்ச் என அனைத்துக்கும் ஜோடியாக வர தொடங்கினர். இருவரும் காதலிக்கிறார்கள் என தெரிந்தாலும், இருவரும் அதை மீடியா முன் ஒப்புக்கொள்ளாமல் இருந்து வந்தனர்.

Aditi and siddharth got married

இந்தநிலையில், அதிதி ராவும் சித்தார்த்தும் இன்று காலை திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆம், தெலுங்கானாவில் உள்ள வனர்பதி மாநிலத்தில் உள்ள ஸ்ரீரங்கபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாயக சுவாமி என்ற கோவிலில் இவர்களின் திருமணம் எளிமையாக நடந்து உள்ளது. குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

Siddharth and Aditi rao got married

இன்று மாலை தங்களது இணையப்பக்கம் மூலம் இவர்கள் தங்களின் கல்யாண புகைப்படங்களை ரசிகர்களுக்கா வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இவர்கள் இருவருக்குமே இரண்டாவது திருமணம். சினிமாவிற்கு வருவதற்கு முன்பே தொழிலதிபரை திருமணம் செய்த அதிதி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். சித்தார்த் 2003 ஆம் ஆண்டு மேகனா என்பவரை திருமணம் செய்து 2007 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Deepika

Recent Posts

ஸ்டாலினுக்கு செம ஷாக்…. திமுக-வில் இருந்து வெளியேறும் முக்கியக் கட்சி…. அதிர்ச்சியில் அறிவாலயம்….!

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய சூழலில் மிகவும் பலம் வாய்ந்ததாகக் கருதப்படும்…

34 minutes ago

விஜய்யுடன் கைகோர்க்கும் சீமான்?…. நாதகவுக்கு ‘ஸ்கெட்ச்’ போட்ட காங்கிரஸ்… 2026 தேர்தலில் உருவாகும் புதிய மெகா கூட்டணி…!

தமிழக அரசியலில் நீண்டகாலமாகத் தனித்துப் போட்டியிட்டு வரும் நாம் தமிழர் கட்சியைத் தங்கள் பக்கம் இழுக்க காங்கிரஸ் மற்றும் தமிழக…

38 minutes ago

இபிஎஸ் வைத்த செக்… 2026-ல் அமையும் மெகா கூட்டணி… வெளியான ரகசிய தகவல்…!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது விடுத்த…

43 minutes ago

“ஷூ ஆர்டர்” செய்த வாடிக்கையாளர் செய்த காரியம்… டெலிவரி ஊழியர்கள் ரூமுக்குள் பார்த்த அதிர்ச்சி காட்சி…!

சென்னையில் 'ஜெப்டோ' (Zepto) ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தின் பொருட்களை நூதன முறையில் மோசடி செய்த வாடிக்கையாளரை, டெலிவரி ஊழியர்கள் கையும்…

47 minutes ago

BREAKING: திடீர் திருப்பம்… விஜய்க்கு ஆதரவு தெரிவித்த ராகுல்காந்தி… செம ஷாக்கில் ஸ்டாலின்…!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர்…

52 minutes ago

ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.3000…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.…

56 minutes ago