Categories: சினிமா

காதல் கதையால் வளர்த்த அப்பாவுடனே மோதும் அதிதி ஷங்கர்.. அஜித்தால் தனுஷுக்கு வந்த சிக்கல்..

Spread the love

2025 ஆம் ஆண்டு வருகிற பொங்கலுக்கு அஜித் நடித்த விடாமுயற்சி, அருண் விஜய் நடித்த வணங்கான் மற்றும் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் ஆகிய திரைப்படங்கள் தான் வெளியாகிறது என்று செய்திகள் வெளியாயின. ஆனால் தற்போது அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் சில பல காரணங்களால் வெளியாகாது ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படும் என்று லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

இது அஜித் ரசிகர்களுக்கு பலருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தியாக தான் அமைந்தது. ஏனென்றால் இந்த படத்துக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். லைக்கா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்ட உடனே பலர் திட்டி தீர்த்து விட்டனர் என்று சொல்லலாம். ஏற்கனவே விடாமுயற்சி பொங்கலுக்கு வருவதால் அருண் விஜய் நடித்த வணங்கான் திரைப்படத்தையே வெளியிடலாமா அஜித்துடன் மோதலாமா வேண்டாமா அல்லது தள்ளி வைக்கலாமா என்று அவர்கள் பேசும் அளவிற்கு நிலைமை இருந்தது. இப்போது விடாமுயற்சி பின்வாங்கியதால் பல சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் சராசரவென பொங்கலுக்கு ரிலீசாக தயாராகி விட்டன.

ஜெயம் ரவி நடித்த காதலிக்க நேரமில்லை, சிபி சத்யராஜ் நடித்த 10 அவர்ஸ், சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடித்த படைத்தலைவன், சுசீந்திரன் இயக்கிய 2K லவ் ஸ்டோரி, ஷானு சிகாம் நடிப்பில் உருவாகி இருக்கும் மெட்ராஸ்காரன், கிஷன் தாஸ் நடித்த தருணம், மிர்ச்சி சிவா நடித்த சுமோ ஆகிய திரைப்படங்கள் அதிரடியாக இந்த பொங்கலுக்கு ரிலீசாகிது. இதாண்டா கிடைத்த சான்ஸ் என்ற அனைவரும் பொங்கலுக்கு களமிறங்க முடிவெடுத்து விட்டார்கள்.

இந்நிலையில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதிசங்கர் நடித்த காதல் திரைப்படமான “நேசிப்பாயா” படமும் பொங்கலுக்கு ரிலீசாகும் என அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது, இந்நிலையில் இதை பார்த்த நெட்டிசன்கள் தனது அப்பா ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படம் வெளியாகிறது. அதற்கு போட்டியாகவே மகளின் படமும் வெளியாகிறது என்று பேசி வருகின்றனர். இதற்கிடையில் அஜித்குமார் நடித்த மற்றொரு படமான “குட் பேட் அகிலி” மே மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்படுகிறது. அந்த தேதியில் தான் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை திரைப்படமும் வெளியாகயிருக்கிறது. அதனால் தனுஷும் அஜித்தும் இந்த முறை மோத போகிறார்கள் என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

admin

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

9 மணத்தியாலங்கள் ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

10 மணத்தியாலங்கள் ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

10 மணத்தியாலங்கள் ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

10 மணத்தியாலங்கள் ago

“அம்மா என்னை விட்டுடுங்க” பள்ளிக்கு அனுப்பக் கதவைத் தட்டிய குடும்பத்தினர்… வீட்டுக்குள் காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… பெற்ற தாயே செய்த் கொடூரம்…!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…

10 மணத்தியாலங்கள் ago