காஞ்சிபுரத்தில் அண்மையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயை ஒரு நடிகையுடன் தொடர்புபடுத்தி விமர்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய தரக்குறைவான விமர்சனம் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பையும் எதிர்ப்பையும் உருவாக்கியது. அரசியல் நாகரிகத்தைக் கடந்து பெண்களை அவமதிக்கும் வகையில் அமைந்த இந்தப் பேச்சு, பொதுவெளியில் கடுமையான விவாதப் பொருளாக மாறியது.
இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நடவடிக்கையில் இறங்கிய தஞ்சாவூர் காவலத்துறை அதிகாரிகள், சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று அவரை அதிகாரப்பூர்வமாகக் கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் வேனில் காஞ்சிபுரத்திற்கு அழைத்துச் சென்று, இரவு காவல் நிலையத்தில் வைத்து கையெழுத்து பெற்ற பிறகு, 10 நிமிடங்களிலேயே அவரை வெளியே அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், மதுராந்தகம் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுகவினரின் பேச்சுப் பழக்கத்தையும் அரசின் தற்போதைய அணுகுமுறையையும் சுட்டிக்காட்டினார். “திமுகவினர் பல வருடங்களாகவே பெண்களை இழிவாகப் பேசி வருவதாகக் கூறுகிறார்கள்; இதற்கு முன்பு அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். ஆனால், தற்போது நடப்பது அண்ணன் விஜயின் ஆட்சி. பெண்களைப் பற்றி அவதூறாக யார் பேசினாலும் அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவரின் கைது நடவடிக்கை குறித்து விளக்கிய ஆதவ் அர்ஜுனா, “10 மணி நேரம் வேனில் கூட்டிச் சென்று, காவல் நிலையத்தில் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே வைத்து கைது செய்வதற்குக்கூட நீ தகுதி இல்லாதவர் எனக்கூறி அனுப்பிவிட்டோம். அந்த 10 மணி நேரப் பயணம் வட மாநில ஊடகங்கள் வரை பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு, திமுகவினர் பெண்களைப் பற்றி எவ்வாறு அவதூறாகப் பேசுகிறார்கள் என்பது இந்தியா முழுவதும் பரவியது. திமுகவைப் பற்றி அனைவரும் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அப்படிச் செய்தோம்” எனக் குறிப்பிட்டார்.
வடமேற்கு டெல்லியின் பிதம்பூரா பகுதியில் துபாயில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவரின் வீட்டை குறிவைத்து மர்ம நபர்கள் திடீர் தாக்குதல்…
ஆர்கென்டினா நாட்டின் பியூர்ட்டோ இகுவாசு வனப்பகுதியில், 70 வயது முதியவர் ஒருவர் டாக்ஸி காரில் சிறுமியுடன் அரை நிர்வாணமாக இருந்த…
குஜராத்தின் சூரத் மாநகரில் அமைந்துள்ள பாண்டேசரா பகுதியில், பொருள்களை விநியோகிக்கும் ஊழியருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே சாதாரணப் பேச்சாகத் தொடங்கிய கருத்து…
மத்தியப் பிரதேசம் குவாலியர் மிருகக்காட்சிசாலை வாசலில் கணவனை பைக் பார்க்கிங் செய்ய அனுப்பிவிட்டு, வெறும் 26 வினாடிகளில் மற்றொரு பைக்கில்…
நடிகர் தனுஷ் சமீபகாலமாகத் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து நலத்திட்ட உதவிகள் வழங்கி அரசியல் நடவடிக்கைகளில் இறங்கி வரும்…
திருமணத்திற்கு 70 நிமிடங்கள் தாமதமாக வந்து முக்கிய சடங்குகளை படம் பிடிக்க தவறிய புகைப்படக் குழுவினர் மீது புதுமணத் தம்பதியினர்…