தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஜனவரி 18) நிறைவடைகிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களைச் சேர்க்க இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் கடந்த வார இறுதி நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், இன்று கடைசி வாய்ப்பாக ஆன்லைன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் வாயிலாக மக்கள் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவங்க https://voters.eci.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்க. அங்கு New Voter Registration-ஐ கிளிக் செய்து படிவம் 6-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். பின்னர் Correction Of Entries என்பதை கிளிக் செய்தால் அடுத்ததாக படிவம் 8 கிடைக்கும். அதில் பெயர், முகவரி, DOB உள்ளிட்ட திருத்தங்களை செய்து சமர்ப்பிக்கலாம்.
இதுவரை சுமார் 12 லட்சத்து 80 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எஸ்.ஐ.ஆர் (SIR) கணக்கெடுப்புப் பணியின் ஒரு பகுதியாக, ஏற்கனவே வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில் இருந்து உயிரிழந்தவர்கள் மற்றும் முகவரி மாறியவர்கள் என சுமார் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், பெறப்பட்ட புதிய விண்ணப்பங்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.
விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் தகவல்களைச் சரிபார்க்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு, பிப்ரவரி 10-ம் தேதி இது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன. அனைத்துத் திருத்தப் பணிகளும் முடிவடைந்த பின்னர், தமிழகத்தின் அதிகாரப்பூர்வமான இறுதி வாக்காளர் பட்டியல் வரும் பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கும் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…