தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் மட்டும் நடித்து அதன் பிறகு தமிழ் சினிமா பக்கம் வராமல் போன நடிகைகளை பற்றி இதில் காண்போம்.
பிரியங்கா சோப்ரா:
பாலிவுடில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போது இவர் ஹாலிவுட்டிலும் தனது காலடித்தடத்தை பதித்துள்ளார். இவர் விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் நடிக்கவில்லை.படத்தின் புகைப்படம்

ராதிகா ஆப்தே:
பாலிவுட் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் கதாநாயகிகளுக்கு முக்கிய கொடுக்கும் கதைகளில் மட்டும் நடித்து வருகிறார். இவர் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘அழகு ராஜா’ படத்தில் சிறப்பு தோற்றத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து ‘கபாலி’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த இரண்டு படங்களுக்கு பின்பு வேறு எந்த தமிழ் படங்களில் இவர் நடிக்கவில்லை.படத்தின் புகைப்படம்

வித்யா பாலன்:
பாலிவுட்டில் மிகவும் பிரபலமாக நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை வித்யா பாலன். இவர் அஜித் நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இதன் பிறகு இவர் எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிக்கவில்லை.படத்தின் புகைப்படம்.

வைஜெயந்தி :
மலையாளத்தில் பிரபலமான நடிகை வைஜெயந்தி. இவர் பிரபு நடிப்பில் வெளியான ‘வண்ண தமிழ் பாட்டு ‘என்ற திரைப்படத்தில் பிரபுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதன் பிறகு இவர் எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிக்கவில்லை.படத்தின் புகைப்படம்.

மானு:
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் அஜித் இவர் நடிப்பில் வெளியான படம் காதல் மன்னன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மானு.திலோத்தமா கதாபாத்திரத்தில் ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். இதன் பிறகு இவர் வேற எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.படத்தின் புகைப்படம்

ஜெயசீல் கோஸ்:
நடன இயக்குனர் பிரபு தேவா நடிப்பில் வெளியான படம் ‘பெண்ணின் மனதை தொட்டு’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை ஜெயசீல் கோஸ். இவர் தன்னுடைய முதல் படத்திலேயே . ரசிகர் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து விட்டார் இதை தொடர்ந்து இவர் ‘சாமுராய்’ என்ற படத்திலும் நடித்தார் .அதன் பிறகு இவர் தமிழில் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.படத்தின் புகைப்படம்

ரக்ஷிதா:
2002 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான படம் ‘தம்’இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. இதை தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு வெளியான விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மதுர’இப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவர் ஒரு தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை.படத்தின் புகைப்படம்.

ஷாஹிக் கான்:
2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘யூத்’ படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தவர் நடிகை ஷாஹிக் கான். இப்படத்திற்கு பிறகு வேற எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிக்கவில்லை.படத்தின் புகைப்படம்

அமோகா:
நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான படம் ‘ஜே ஜே’ படத்தில் இவருக்கு கதாநாயகியாக நடித்தவர் நடிகை அமோகா. இவர் இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியிலும் ரசிகர் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு பெற்றார். இப்படத்திற்குப் பிறகு இவர் எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.படத்தின் புகைப்படம்.

ரிங்கே கன்னா:
நடிகர் பிரசாந்த் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மஜ்னு’ இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரிங்கே கன்னா. இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.இப்படத்திற்குப் பிறகு இவர் எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.படத்தின் புகைப்படம்.

ரியா சென்:
பிரபல இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தின் வெளியான படம் ‘தாஜ்மஹால்’. இப்படத்தில் கதாநாயகி நடித்து மக்கள் மத்தியில் ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ரியா சென். இவர் தமிழில் குட்லக் ,அரசாட்சி போன்ற படங்களில் மட்டும் நடித்துள்ளார். இப்படத்திற்குப் பிறகு இவர் எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.படத்தின் புகைப்படம்.

வசுந்தரா தாஸ்:
1999 ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஹேராம்’ இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை வசுந்தரா தாஸ். இதை தொடர்ந்து இவர் 2001 ஆம் ஆண்டு வெளியான ‘சிட்டிசன்’ படத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இப்படத்திற்குப் பிறகு இவர் எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.படத்தின் புகைப்படம்.

சோனாலி பேந்திரே:
1999 ஆம் ஆண்டு வெளியான ‘காதலர் தினம்’ படத்தில் நடிகையாக நடித்து மக்கள் மக்கள் மனதில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை சோனாலி பேந்திரே இதை தொடர்ந்து ‘ கண்ணோடு காண்பதெல்லாம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்குப் பிறகு இவர் எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.படத்தின் புகைப்படம். 
