இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை விஜயலட்சுமி.
அதன் பிறகு இயக்குனர் மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக தங்க கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு திரைப்படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இது விஜயலட்சுமிக்கு சினிமாவில் ஒரு நல்ல வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கின. சரோஜா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
பின்னர் பிரியாணி மற்றும் வெண்ணிலா வீடு உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் ஒரு அடையாளம் தெரியும் நடிகையாக விஜயலட்சுமி மாறி இருந்தார்.
ஆனால் பெரிய நடிகைகள் அளவுக்கு பட வாய்ப்புகள் எதுவும் அவருக்கு சரியாக கிடைக்கவில்லை. இதனால் வெப் சீரிஸ்கள் மீது கவனம் செலுத்தினார். அதன்படி தெலுங்கில் வெளியான ஒரு வெப் சீரிஸில் 2019 ஆம் ஆண்டு இவர் நடித்திருந்தார்.
நடிகர் ஜெயம் ரவியின் இறைவன் திரைப்படத்தில் நடித்தார். இதற்கு நடுவே டிவி தொடர்களிலும் விஜயலட்சுமி கவனம் செலுத்தி வருகிறார். இவர் ஃபெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விஜயலட்சுமி அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது சேலையில் க்யூட்டான நோக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…